சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டிய ‘குற்றம் 23’

“தாய்மை பெற்றெடுப்பதில் மட்டுமல்ல, தத்தெடுப்பதிலும் உண்டு’ என்ற உன்னதமான கருத்தை மையமாக கொண்டு உருவான ‘குற்றம் 23’ திரைப்படம், இந்த மகளிர் தினத்தில் ஒட்டுமொத்த பெண் ரசிகர்களின் பாராட்டுகளையும் அமோகமாக பெற்று வருகிறது. அருண் விஜய் நடிப்பில், அறிவழகன் இயக்கத்தில், மெடிக்கல் – க்ரைம் – திரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இந்த குற்றம் 23 படத்திற்கு, விஷால் சந்திரசேகரின் இசையும், கே எம் பாஸ்கரின் ஒளிப்பதிவும், புவன் ஸ்ரீனிவாசனின் படத்தொகுப்பும் பக்கபலமாய் அமைந்திருக்கிறது என்பதை எந்தவித சந்தேகமுமின்றி சொல்லலாம்.

“ரசிகர்களின் உள்ளங்களை வென்றது மட்டுமின்றி, வர்த்தக உலகிலும் சிறந்ததொரு வெற்றியை தழுவி இருக்கின்றது, எங்கள் ‘குற்றம் 23’ திரைப்படம். ஒரு விநியோகஸ்தருக்கு இதை விட பெருமை என்ன இருக்கின்றது. அருண் விஜய், இயக்குநர் அறிவழகன் மற்றும் தயாரிப்பாளர் இந்தெர் குமார் ஆகியோரோடு இத்தகைய தரமான திரைப்படத்திற்கு கைக்கோர்த்தது, எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது. படம் வெளியான முதல் நாளில் இருந்து தொடர்ந்து வர்த்தக ரீதியாக முன்னிலை வகித்து வருகிறது எங்களின் குற்றம் 23. ‘வெற்றிமாறன்’ என்கின்ற கதாபாத்திரத்திற்கு ஏற்ப வெற்றி வாகையை சூடி இருக்கிறார் அருண் விஜய்” என்று மகிழ்ச்சியாக கூறுகிறார் ‘அக்ராஸ் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் பிரபு வெங்கடாச்சலம்.