Kuttram 23 Tamil Movie Review by jackiesekar

ஈரம் படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் அறிவழகன்… சரக்குள்ள ஆளுன்னு முத படத்துல நிரூபிச்சவர்… ஆனாலும் வல்லினம் மற்றும் ஆறாது சினம் மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குனர் அறிவழகன் மீண்டும் தான் சரக்குள்ள ஆள் என்று குற்றம் 23 திரைப்படத்தின் மூலமாக கவனத்தை மீண்டும் ஈர்த்து இருக்கின்றார்.

இந்த படத்தோட டிரைலர் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டியது. அது மட்டுமல்ல அறிவழகன் புகுந்து விளையாடும் கிரைம் திரில்லர்தான் களம்… அதனால் இன்னும் எதிர்பார்ப்பு அதிகரித்த்து என்பதே உண்மை… ஆனாலும் அசத்தி விட்டார் அறிவு.
===========
குற்றம்23 திரைப்படத்தின் கதை என்ன?
சர்ச்சில் பாவமன்னிப்பு கொடுக்க வந்த பாதரும் பாவமன்னிப்பு எடுக்க வந்த ஜெசிகா என்ற இளம் பெண்ணும் கொடுரமாக கொலையாகின்றார்கள். அந்த கொலையை பார்த்த ஒரே சாட்சி ஹீரோயின் மஹிமா நம்பியார். இந்த சிக்கலான கொலை கேசை கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு அசிஸ்டன்ட் கமிஷ்னர் அருண்விஜய்யிடம் வந்து சேர்கின்றது. அந்த கொலை கேசை கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே குற்றம் 23 திரைப்படத்தின் கதை.
அருன் விஜய் அவர் கேரியரில் பெருமையாக சொல்லிக்கொள்ளும் படியான ஒரு திரைப்படம் குற்றம் 23. நடை உடை பாவனை மிடுக்கு கட்டுமஸ்த்து என்று கலந்து கட்டி அடிக்கின்றார் அருன் விஜய்.
முக்கியமாக நான் கட்டிக்கிறேன்னு சொல்லிட்டு கோத்தா இதுக்குதான் நான் உன் கிட்ட அடிக்கடி பேசினேன் என்று அசால்டாக அதே நேரத்தில் மிடுக்காக நடக்கும் அருன்விஜய் கவனம் ஈர்க்கின்றார்.

முக்கியமாக அருன் மற்றும் மஹிமாவுக்கு இடையே நடக்கும் விசாரனை அசத்தல் காட்சிகள்.

மஹிமா நம்பியார்.. சாட்டை படத்தில் பார்த்த பெண்… அரசினர் பள்ளி சீருடை அணிந்து கிராமத்து பெண் போல தோற்றம் டிரைலரில் மார்டன் டிரஸ் மற்றும் புடவையில் பார்த்த போது காதல் கொள்ள வேண்டும் என்ற தோற்றத்தில் அசத்துகின்றார்.
சான்சே இல்லை… ஒவ்வோரு பிரேமிளும் அழகுடன் மிளிர்கின்றார்…
ஏன் முன்னாடியே சொல்ல்லை என்று கேட்கும் போது எல்லாத்தையும் போலிஸ்கிட்ட சொல்லனும்னு அவசியம் இல்லை அப்ப இப்ப மாட்டும் ஏன் சொன்ன..? புடிச்சவங்க கிட்ட எல்லாத்தையும் சொல்லலாம் என்று காதலை டிக்ளேர் செய்யும் காட்சி கிளாஸ்.
படத்தில் நடித்த தம்பிராமைய்யா மற்றும் அனைத்து கலைஞர்களும் அவர்கள் பாத்திரத்தை மிக சிறப்பாக செய்து இருக்கின்றார்கள்..
அதே போல ராஜேஷ் குமார் நாவலை மிகசரியாக செல்லுலாய்டில் மாற்றிய வகையில் அறிவழகன் ராஜேஷ்குமாருக்கு சிறப்பு செய்து இருக்கின்றார்..
அபினாயாவுக்கு அண்ணி வேடம் சிறப்பான வேடம்… நன்றாக செய்து இருக்கின்றார்.,
படத்தின் மைனஸ் என்று பார்த்தால்..?
வீட்டில் இருக்கும் அசிஸ்டென்ட் கமிஷனரையே நம்பாமல் இருப்பது.. அசிஷ்டன்ட் கமிஷனர் இல்லத்துக்கு எந்த பாதுகாப்பும் இல்லாமல் இருப்பது..

படத்தின் பெரிய பலம் பாஸ்கரின் ஒளிப்பதிவு.. ஒரு டென்மார்க் திரைப்படத்தை பார்த்த பீல் கிடைத்தது.. அதே போல படத்தின் டோன் பெரிய ரிச்லுக்கை கொடுத்தது என்றால் அது மிகையில்லை. விஷால் சந்திரசேகரின் இசை பிரேமுக்கு பிரேம் ஒரு படபடப்பை கொடுத்தது என்றால் மிகையில்லை. அதே போல பாடல்களை போட்டு கொல்லாமல் திரைக்கதையின் போக்கில் படம் சென்றதால் ரசிக்க முடிகின்றது.
எடிட்டிங் புவன் சினுவாசன் சண்டை காட்சிகளில் பட்டையை கிளப்பி இருக்கின்றார்… முக்கியமாக அப்பார்ட்மென்ட்டில் அரவிந்தோடு நடக்கும் சண்டை காட்சி சான்சே இல்லை.

குழந்தை பேறு என்ற சமுக பிரச்சனையை மெடிக்கல் கிரைம் திரில்லராக சுவாரஸ்யத்தோடு அதே வேளையில் இந்த திரைப்படம் சமகால வாழ்வியல் பிரச்சனையை அழுத்தம் திருத்தமாக பேசும் வகையில் இயக்குனர் அறிழகனுக்கு ஜாக்கி சினிமாஸ் சார்பாக ஒரு பூங்கொத்து பார்சல்..
அவசியம் பார்த்தே தீர வேண்டிய திரைப்படம்-
ஜாக்கிசினிமாஸ் மதிப்பெண்.
5/3.75
வொர்த் வாட்சிங் மெடிக்கல் கிரைம் திரில்லர்

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
03/03/2017

வீடியோ விமர்சனம்

 

https://youtu.be/nyTw07uBHX0