ஆர்ட் டைரக்டர் கிரண் இப்போது வளர்ந்து வரும் புது முக நடிகராக தமிழ் சினிமாவில் கலக்கிக்கொண்டிருக்கிறார்

ஆர்ட் டைரக்டர் கிரண் இப்போது வளர்ந்து வரும் புது முக நடிகராக தமிழ் சினிமாவில் கலக்கிக்கொண்டிருக்கிறார். மீனவர் குடும்பத்தில் பிறந்த இவர் படித்து பட்டம் பெற்று ஒரு ஆர்ட் டைரக்டராகவும் நடிகராகவும் வளர்ந்திருக்கிறார்.

திருதிரு துறுதுறு படத்தின் மூலம் நடிகரான கிரண் தற்போது பத்திற்கும் மேற்பட்ட படங்களில் முக்கியப் பாத்திரங்களில் நடித்து வருகிறார். 90களில் ஆர்ட் டைரக்டர் அஸிஸ்டெண்டாக சினிமா வாழ்க்கையை ஆரம்பித்த இவரது பயணம்இன்று மிகப்பிரமாண்டமாக வளர்ந்திருக்கிறது. சுரேஷ், நாகராஜ், ராகவன் ஆகிய ஆர்ட் டைரக்டர்களின் அஸிஸ்டெண்டாக பல படங்களில் பணிபுரிந்த இவர் ராஜிவ் மேனனுடன் 100க்கும் மேற்பட்ட விளம்பரப்படங்களில் ஆர்ட் டைரக்டராக பணிபுரிந்துள்ளார்.

இயக்குனர் கே வீ ஆனந்தின் வற்புறுத்தலால் திரைப்படங்களில் ஆர்ட் டைரக்டராக வளம் வரத்தொடங்கினார். கோ, அனேகன், மயக்கம் என்ன , இரண்டாம் உலகம், போடா போடி, நானும் ரௌடிதான் போன்ற தமிழ் சினிமாவின் மிக முக்கியப் படங்களில் ஆர்ட் டைரக்டராக பணிபுரிந்துள்ளார். அனேகன், இரண்டாம் உலகம் இவரின் ஆர்ட் டைரக்‌ஷன் பத்திரிக்கை விமர்சகர்களால் பெரிதும் பாரட்டப்பட்டது. இப்போது விஜய் சேதுபதியின் கவண், சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படங்களில் ஆர்ட் டைரக்டராக பணிபுரிந்து வருகிறார்.

வேலையில்லாப் பட்டதாரி படத்தின் மூலம் இவர் நடிப்பு வெளிச்சத்துக்குள் வந்தார். பின் கோ, அனேகன், கதகளி,காதலும் கடந்து போகும் படங்களில் நடித்திருக்கிறார். தற்போது வெளி வந்திருக்கும் எமன் படத்தில் இவரது கவுன்சிலர் கேரக்டர் பெரிதும் பாராட்டும்படி உள்ளது. மேலும் வெளிவர இருக்கும் கவண் படத்தில் தன் தோற்றத்தை மாற்றி போலிஸாக நடித்துள்ளார். பலகோணங்களில் நல்ல கதாப்பாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ள இவர் தான் ஆர்ட் டைரக்டராக பணிபுரியாத பல படங்களில் நடிகராக மட்டுமே பங்கு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நடிப்பில் முழு கவனம் செலுத்தி வரும் இவர் வித்தியாசமான வேடங்கள் கிடைத்தால் சின்ன படம், பெரிய படம் என்ற வேறுபாடில்லாமல், சம்பளம் பற்றிய கவலை இல்லாமல் நடிப்பேன் என்கிறார். தனக்கு கிடைக்கும் கேரடர்களே முக்கியம் என்கிறார் கிரண்.

Previous article‘Miss South India’ – ‘Best Smile’ Anjali Rao Turns Heroine Through ‘Peechaankai’
Next articleஅமெரிக்காவில் நடிப்பு பயிற்சி பெற்ற சாக்ஷி அகர்வால்