புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நடிப்பில் படகோட்டி, நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களின் நடிப்பில் உத்தமபுத்திரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய T.பிரகாஷ்ராவ் அவர்களின் பேரன் T.சத்யா “யார் இவன்” படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமாகிறார்.
பீமிலி கபடி ஜட்டு, எஸ்.எம்.எஸ், ஷங்கரா ஆகிய தெலுங்கு படங்களை இயக்கி பெரும் வெற்றியை கண்ட T.சத்யா இயக்கும் முதல் தமிழ் படம் “யார் இவன்”.
“யார் இவன்” ஒரு காதல் கதை கலந்த மர்ம த்ரில்லர் திரைப்படம். சச்சின் நாயகனாகவும் ஈஷா குப்தா நாயகியாகவும் நடிக்கின்றனர். பிரபு, சதீஷ், வென்னெலா கிஷோர், கிஷோர் குமார் உள்ளிட்டவர்களும் படத்தில் உள்ளனர்.
ஏப்ரல் 2017 படத்தின் வெளியீடு திட்டமிடப்பட்டுள்ளது. இது ஒரு சுவாரசியமான ஆக்ஷன் த்ரில்லர் படமாக இருக்கும் என தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது