விவேகானந்த நவராத்திரி விழாவின் ஏழாம் நாள், பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி மாணவர்களின் பஜனையுடன் தொடங்கியது. டாக்டர் சௌத்ரி, முன்னணி இதய நிபுணர் மற்றும் ராமகிருஷ்ண மடத்தின் தீவிர பக்தர், சுவாமி விவேகானந்தரின் உரைகளிலிருந்து சில பகுதிகளை வாசித்தார்.
சுவாமி நீலமாதவானந்த மகாராஜ் “சுவாமி விவேகானந்தர் கண்ட பென் சிங்கம் சகோதரி நிவேதிதா’ என்ற தலைப்பில் பேசினார். சுவாமி, சகோதரி நிவேதிதாவை பற்றி மகாகவி பாரதியின் அற்புதமான பிரார்த்தனையுடன் தனது உரையை தொடங்கினார். சுவாமி விவேகானந்தர், நிவேதிதாவிடம் கூறினார்: நீங்கள் இந்தியர்கள் தங்கள் இழந்த மகிமை மீண்டும் பெறுவதற்கு கற்று கொடுக்க வேண்டும்.’ ஆனால் சகோதரி நிவேதிதா, தான் இந்தியாவிலிருந்து கற்று கொள்ள வேண்டும் என்று கூறினார். உடனே சுவாமிஜி பதிலளித்தார் “நீங்கள் இந்தியா செல்ல உகந்த தருணம் இதுவே.”
சுவாமி விவேகானந்தர், நிவேதிதாவிற்கு கொடுத்த சில முக்கியமான கருத்துக்கள் பின்வருமாறு:
– நீங்கள் இந்திய மக்களுக்கு தேசிய கோட்பாடுகளை கற்று கொடுத்து பரப்ப வேண்டும்.
– ஆன்மீக எழுச்சி பெற மக்களுக்கு உதவ வேண்டும்.
– அவர்களுக்கு கல்வி போதிக்க வேண்டும்.
– ராமாயணம் , மகாபாரதம் போன்ற இதிகாசங்களை இந்தியர்கள் அனைவரையும் படிக்க செய்ய வேண்டும்
– இந்தியர்கள் தங்கள் சொந்த வரலாற்றை மற்றவர்கள் எழுத வேண்டும்.
– சேவை மனப்பான்மை வளர வேண்டும். ஜீவ சேவையில் மக்களை ஈடுபடுத்தபட வேண்டும்
சுவாமி, சகோதரி நிவேதிதாவை எப்படி பக்தர்கள் மற்றும் தூய புனித அன்னை சாரதா தேவி, எந்த தயக்கமும் இல்லாமல் ஏற்றுக்கொண்டார் என்று விளக்கினார்.
திருமதி. சித்ரா விஷ்வேஸ்வரன், செயலாளர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் நிகழ்வின் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார். அவள் கொல்கத்தா, கோல்பார்க் பகுதியில் வளர்ந்தார். தனது குழந்தை பருவத்து அனுபவங்களை விவரித்தார். அவரது சிறப்பு முகவரையிருந்து சில: சுவாமி விவேகானந்தர், சுதந்திரப் போராட்டத்திற்கான விதைகளை விதைத்தார். பிரிட்டிஷ் ஆட்சியின் அந்த நேரத்தில் நம் மக்கள் தங்கள் வாழ்க்கையை ஆங்கில பாணியில் மாற்றி கொண்டனர். சுவாமிஜி நம் பாரம்பரியத்தை நினைவூட்டினார். அவர் தனது குருவை பல முறை கேள்வி கேட்டார், ஆனால் அது பெரிய சிந்தனைகளை புரிந்துகொள்ள நேர்மையான அழைப்புகளாக இருந்தது. நம் குழந்தைகளுக்கு விவேகானந்தர் இல்லம் போன்ற இடத்தின் மகிமையைக் உணர்த்த வேண்டும். அவர்கள் தங்கள் நாட்டின் மீது பெருமை கொள்ள வேண்டும்.
இன்றைய நிகழ்ச்சியின் முத்தாய்யாப்பாக “அஹம் பிரம்மாஸ்மி” என்ற வேத மந்திர கருத்தின் கோட்பாட்டில், திருமதி ஷீலா உன்னிகிருஷ்ணன் மற்றும் அவரது சீடர்கள் நாட்டியா நாடகம் நடைப பெற்றது. இந்த மந்திரம் உபநிடதங்களின் மஹாவாக்கியங்களில் ஒன்றாகும். திருமதி ஷீலா அவர்கள் மேலாட்டம என்ற பரதநாட்டிய பாரம்பரியத்தில் இருந்து வந்தவர்.
23 நடனக் கலைஞர்கள் இந்த நிகழவில் ஆடினர். ‘மாயையின்’ வருகை மற்றும் நடவடிக்கைகளை அழகாக விவரித்தனர். ஸ்ரீ சங்கரரின் வாழ்க்கை சித்தரிக்கப்பட்டது. ஆத்மா விடுதலை பெற அத்வைத்தம் மட்டுமே ஒரே பாதையாக இருக்கிறது – இந்த மகத்தான தத்துவமே நடனத்தின் மையக்கருவாக மிக அழகாக அமைந்திருந்தது. நாட்டிய நாடகம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 500 க்கும் மேற்பட்ட மக்கள் மாலை நவராத்திரி நிகழ்சிகளில் கலந்து கொண்டனர்.