விவேகானந்த நவராத்திரி தொடக்க விழா மற்றும் தெய்வீகப் புத்தக கண்காட்சி திறப்பு விழா

1897ல், சுவாமி விவேகானந்தர் 9 நாட்கள் விவேகானந்தர் இல்லத்தில் 9 நாட்கள் பிப்ரவரி 6 முதல் 14 வரை தங்கினார். இந்த 9 நாட்கள் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் மற்றும் பக்தர்களால் ‘விவேகானந்தர் நவராத்திரி’ என்று கொண்டாடப்படுகிறது.

இன்று விவேகானந்தர் நவராத்திரி கொண்டாட்டங்கள், டாக்டர் சுதா ராஜா மற்றும் குழுவினரின் பக்தி பாடல்களுடன் தொடங்கியது. தெய்வீக புத்தக விழாவை முக்கிய விருந்தினரான திரு என். கோபாலசாமி, முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தொடங்கி வைத்தார்.
வேத கோஷங்களுடன் குத்து விளக்கு ஏற்றப்பட்டது. சுவாமி விமூர்த்தானந்த மகாராஜ், மேலாளர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை தனது வரவேற்புரையில் விவேகானந்த நவராத்திரியின் முக்கியத்துவத்தை விளக்கினார். மேலும் “நாம் இந்தியர்கள், எப்படி வாழ வேண்டும்? நாம் உலக நாடுகளுடன் கலந்து வாழ வேண்டும், கருத்து பரிமாற்றம் செய்ய வேண்டும். அதன் மூலம் உலகம் முழுவதும் இந்து மதம் கலாச்சாரம் மற்றும் நமது ஆன்மீக எண்ணங்களை பிரச்சாரம் செய்ய வேண்டும். வெற்றியும்-வெற்றியும் (Win-Win) கலாச்சாரத்தை வளர்க்க வேண்டும். சுவாமி விவேகானந்தரின் இளைஞர்களின் மீதான நம்பிக்கை சமீபத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் எழுந்த இளைஞர்களின் எழுச்சி போராட்டத்தின் மூலம் நிரூபிக்கப்பட்டது.

பத்மஸ்ரீ நல்லி செட்டியார், ஸ்ரீ என் ரவி, இயக்குனர், கஸ்தூரி அண்ட் சன்ஸ் லிமிடெட் (தி இந்து), ஸ்ரீ ஆனந்த், மூத்த வழக்கறிஞர், கேரள உயர் நீதிமன்றம் மற்றும் ஸ்ரீ என் முரளி, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு உரைகள் நிகழ்த்தினர்.
முக்கிய விருந்தினரான என் கோபாலசாமி தமது உரையில் “சுவாமி விவேகானந்தர் 120 ஆண்டுகளுக்கு முன், இந்த நவராத்திரி நாட்களில் இந்தியர்களுக்கு இந்தியாவை அறிமுகப்படுத்தினார். சென்னை, ஏன் சென்னை மட்டுமா? தமிழ்நாடு முழுவதும் இதனால் பெருமை பட வேண்டும். இந்த காலத்தில் தெய்வீக புத்தக விழாவி மிக அவசியமானது, வாசிக்கும் பழக்கம் மெதுவாக மறைந்து வரும் இந்த நாளில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ராமகிருஷ்ண மடம் நடத்துக்கும் இந்த புத்தக திருவிழாவை நன்கு பயன்படுத்திக் கொண்டு நாம், நமது பாரம்பரியம் பற்றிய செய்திகளை அறிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்த மகாராஜ் தமது ஆசியுரையில் ‘சுவாமிகள் மேற்கில் வெற்றிகரமாக சுற்றுப்பயணம் செய்த பிறகு இந்தியா திரும்பிய நூற்றாண்டு ஆண்டான1997யில்ல் விவேகானந்தர் இல்லம், ராமகிருஷ்ண மடத்தால் பெறப்பட்ட நிகழ்வை நினைவு கூர்ந்தார்’

ஏழு மணியளவில் ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் “கீதையின் சாரம்” என்ற தலைப்பில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தினார். உபன்யாசத்திலிருந்து சில கருத்துகள் : நான் உடம்பல்ல, ஆன்மா என்பதை நாம் அறிந்து கொண்டால் எதற்கும் பயப்பட தேவையில்லை. ஸ்ரீ கிருஷ்ணா கூறுகிறார் ‘நான் இந்த மூன்று உலகங்கள் எதுவும் இல்லை. நான் உங்கள் கடமைகளின் பலன்களை தருபவன்’ ஆனால் பகவான் இரவும் பகலும் நாம் இந்த தத்துவத்தை உணர்வதற்காக பாடுப்படுகிறார். கீதையின் ஆசிரியனான கிருஷ்ணர், அர்ஜுனனின் தேரை செலுத்துகிறார். ஸ்ரீ கிருஷ்ணர் ஒரே சமயம் ஆசிரியராகவும் அதை நேரத்தில் வேலையை செய்பவரகாவும் விளங்குகிறார். எனவே நாம் செவ்வனே இவ்வுலக கடமைகளை செய்ய வேண்டும். சுவாமி அபவர்கானந்தர், ஆசிரியர், ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் நன்றி நவில விழா இனிதே நிறைவுட்றது. 600க்கும் அதிகமான மக்கள் முதல் நாள் விழாவில் கலந்து கொண்டனர்.