பி.வி.பி சினிமா , மேட்ணீ எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இனைந்து வழங்கும் மும்மொழி படைப்பு “ காஸி “ இது ஒரு போர்கள திரைப்படமாக உருவாகிவுள்ளது. பிப்ரவரி மாத வெளியீடாக வரவுள்ள இப்படத்தில் ராணா டகுபதி,டாப்ஸி பன்னு, நாசர்,கே.கே.மேனன்,அதுல் குல்கர்னி ஆகியோர் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மறைந்த பழம்பெரும் நடிகரான ஓம்பூரி நடித்த கடைசி திரைப்படம் இது தான் என்பது பெருமைக்கூரிய ஒன்றாகும். மிக பிரம்மாண்டமான படைப்பாக உருவாகி வரும் இப்படத்தை அறிமுக இயக்குநர் சங்கல்ப் இயக்கியுள்ளார். இப்படம் யாராலும் வீழ்த்த முடியாத நீர் முழ்கி கப்பலான PNS காஸியை பற்றி மிக ஆழமாக பேசும் ஒரு படைப்பாக இருக்கும். ஒளிப்பதிவாளர் மதி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தை தேசிய விருது வென்ற படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்ய,பல வெற்றி படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் கே இசையமைக்கிறார். எந்தவித சமரசமுமின்றி பி.வி.பி சினிமாஸ் நிறுவனம் இப்படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளிவந்த இப்படத்தின் ட்ரைலர் அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்று சமூக வலைதளங்களில் அதிக அளவில் விரும்பி பார்க்கப்பட்டுள்ளது. இந்திய கடற்படையின் பொன் விழாவான இவ்வருடத்தில் இப்படம் வெளிவருவது பெருமைக்கூரிய ஒன்றாகும்