‘அவள் பெயர் தமிழரசி’ வெற்றி திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் மீரா கதிரவன் தயாரித்து இயக்கி இருக்கும் திரைப்படம் – ‘விழித்திரு’. கிருஷ்ணா – வித்தார்த் – வெங்கட் பிரபு என மூன்று கதாநாயகர்கள் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘விழித்திரு’ திரைப்படத்தை, ‘ஹாயா மரியம் பிலிம் ஹவுஸ்’ சார்பில் மீரா கதிரவனும் அவருடைய நண்பர்களும் இணைந்து தயாரித்து இருக்கின்றனர். இந்த படத்தில் தம்பி ராமையா, எஸ் பி சரண், தன்ஷிகா, அபிநயா, ராகுல் பாஸ்கரன், எரிக்கா பெர்னாண்டஸ், பேபி சாரா, சுதா சந்திரன் மற்றும் சிரஞ்சீவியின் சகோதரர் நாக பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் ‘விழித்திரு’ திரைப்படம் தற்போது தணிக்கை குழுவினரிடம் இருந்து ‘U’ சான்றிதழை பெற்று இருக்கின்றது.
“சமூதாயத்தில் நடக்க கூடிய உண்மை நிகழ்வுகளை பிரதிபலிக்கும் திரைப்படமாக உருவாகி இருக்கும் எங்களின் ‘விழித்திரு’ திரைப்படத்திற்கு, தணிக்கை குழுவினர் ‘U’ சான்றிதழ் வழங்கி இருப்பது, பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கின்றது. இன்றைய சமூதாயத்தில் வாழும் மக்களுக்கு தேவையான மிக முக்கியமான சிறப்பம்சத்தை எங்களின் ‘விழித்தி’ரு திரைப்படம் உள்ளடக்கி இருக்கின்றது. வருகின்ற பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்தில் நாங்கள் எங்களின் ‘விழித்திரு’ திரைப்படத்தை வெளியிட முடிவு செய்து இருக்கின்றோம் ” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குநர் மீரா கதிரவன்.