கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில், நிவின் பாலி – நட்ராஜ் சுப்ரமணியம் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘ரிச்சி’

236

கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில், நிவின் பாலி – நட்ராஜ் சுப்ரமணியம் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படத்திற்கு ‘ரிச்சி’ என்று தலைப்பிட பட்டிருக்கிறது. ரசிகர்களின் அமோக எதிர்பார்ப்பை பெற்று வரும் இந்த ‘ரிச்சி’ படத்தில் பிரகாஷ் ராஜ், ‘யு டர்ன்’ படப்புகழ் ஷ்ரதா ஸ்ரீனிவாஸ், ராஜ் பரத் மற்றும் ‘சுட்டக்கதை’ புகழ் லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி ஆகியோர் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

“இந்த ‘ரிச்சி’ படத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் ஒரு ரௌடி கதாபாத்திரத்தில் நிவின் பாலியும், படகுகளை சரி செய்யும் மெக்கானிக் கதாபாத்திரத்தில் நட்டியும் நடித்துள்ளனர். இவர்கள் இருவரையும் மையப்படுத்தி தான் எங்களின் ‘ரிச்சி’ படத்தின் கதை நகரும். பல எண்ணற்ற யோசனைகளுக்கு பிறகு, நாங்கள் இந்த படத்திற்கு ‘ரிச்சி’ என்று தலைப்பிட்டுள்ளோம். ‘ரிச்சி’ என்பது நிவின் பாலி நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர். தமிழில் முதல் முறையாக தன்னுடைய சொந்த குரலில் டப்பிங் செய்து இருக்கும் நிவின் பாலி, ஏறக்குறைய 75 சதவீத படப்பிடிப்பு காட்சிகளை நிறைவு செய்து இருக்கிறார். வருகின்ற கோடை விடுமுறை நாட்களில் நாங்கள் ‘ரிச்சி’ படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம். படத்தின் முதல் காட்சி போஸ்டரையும், டைட்டில் டிசைனையும் இன்னும் ஒரு வாரத்தில் வெளியிட நாங்கள் திட்டமிட்டு இருக்கின்றோம்” என்று உற்சாகமாக கூறுகிறார் இயக்குநர் கௌதம் ராமச்சந்திரன்.

Previous articleNisaptham Audio Launch Stills
Next articleLetsGoParty – Mupparimanam Promo Song