லண்டனில் துவங்கும் கொலையுதிர் காலம்

இசை அமைப்பாளர்  யுவன் ஷங்கர் ராஜா தன்னுடைய ஒய் எஸ் ஆர் பிலிம்ஸ் சார்பில் பிரபல ஹிந்தி  தயாரிப்பாளர்   வாசு பாக்னானி  உடன் இணைந்து   தயாரிக்கும்  கொலையுதிர் காலம் படத்தின்  படப்பிடிப்பு  லண்டனில் இன்று துவங்கியது. ‘என் வாழ்வில் மறக்க முடியாத நாள் இன்று என்று தான் சொல்லுவேன். தரமான படங்களை தயாரிக்கும் நிறுவனமாக என்  பட நிறுவனம் இருக்க வேண்டும் என்கிற என் கனவு . அதற்க்கு ஏற்றார் போல் அமைந்து இருக்கிறது கொலையுதிர் காலம்.  என் நண்பனும் இயக்குனருமான சக்ரி தோளேத்தி  மிக மிக நேர்த்தியான , ஆங்கில படங்களுக்கு இணையான திரை கதை அமைத்து இருக்கிறார். அதற்க்கு வலு சேர்க்கும் விதமாக படத்தின் நாயகி நயன்தாரா இந்தக் கதைக்கு மிக பொருத்தமாக இருக்கிறார்.பிரபல ஹிந்தி பட ஜாம்பவான் ஆன வாசு பாகனானி அவர்களின்  பூஜா பிலிம்ஸ் உடன் இணைந்து  தயாரிப்பது  எனக்கு உச்சக் கட்ட பெருமை’ என்கிறார் யுவன் ஷங்கர் ராஜா.