கடலூர் சினிமா ரசிகர்களின் ரசனையை கிருஷ்ணாலயா தியேட்டர் மேம்படுத்தியது என்றால் அது மிகையில்லை…
1986 ஆம் ஆண்டு இந்த தியேட்டர் கடலூர் மாநகரில் திறந்துவைக்கப்பட்டது..
கிருஷ்ணாலாயில் வெளியான முதல் படம்.. விஜயகாந்த் நடித்த தர்மதேவதை, கமலின் எல்லா படங்களும் இந்த தியேட்டரில் திரையிட்டு இருக்கின்றார்கள்…
அதே போல புது புது டெக்னாலஜி மார்கெட்டில் அறிமுகமானால் போதும்…. அவ்வளவு ஏன் -? சென்னையில் டிடிஎஸ் அமுல்படுத்தும் போதே கிருஷ்ணாலயா தியேட்டரில் அறிமுகபடுத்தி விடுவார்கள்…
அந்த அளவுக்கு அந்த தியேட்டரின் ஓனர் துரை ராஜ் ரசனைக்காரர்… தியேட்டரே கலைநயத்தோடுதான் இருக்கும்..
எல்லா தியேட்டர் அதிபர்களும்…வந்தானுக்கு வந்தான் போனானுக்கு போனான் என்று தியேட்டரை நடத்தும் போது துரை அவர்களின் வருகைக்கு பின் கிருஷ்ணாலயா கடலூர் சினிமா ரசிகனின் ரரசனை மாற்றத்துக்கு வித்திட்டது எனலாம்…. அதன் பின் பழைய தியேட்டரான நியூசினிமா, புதுப்பொலிவு பெற்றது…
வேல்முருகன் இடித்து விடுவார்கள் என்று நினைத்த போது இவர் லீசுக்கு எடுத்து வேல்முருகன் தியேட்டரை புத்தம் புது பொலிவாக மாற்றி விட்டார்… அந்த அளவுக்கு ரசனையோடு தியேட்டரை நடத்தும் ரசனைக்காரர்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்த துரை அவர்களுக்கு உதித்ததுதான் பெப்சி கோக் விற்காமல்.. இளிநி விற்கும் ஐடியா…
கோக் மற்றும் பெப்சி உடலுக்கு தீமை கொடுக்க கூடிய ஒன்றை விற்று லாபத்தை பன்னாட்டு நிறுவனங்களுக்கு கொடுப்பதற்கு பதில்… இளநி விற்றால் அது நமது ஏழை விவசாயிகளுக்கு பயண்தரும் என்பதால்… ஜல்லிக்கட்டு போராட்டம் உச்சம் பெற்ற போதே தான் நடத்தும் தியேட்டர்களில் பெப்சி கோக் விற்பதை நிறுத்து விட்டு இளிநி விற்றுக்கொண்டு இருக்கின்றார்…
கடலூரில் இருக்கும் தனது தியேட்டரில் ஒரு நாளைக்கு சராசரியாக 1300 டிக்கெட்டுகள் விற்பனையாகின்றன… அதில் பாதிக்கு பாதி ரசிகர்கள் கோக் வாங்குகின்றார்கள் என்று வைத்துக்கொள்வோம்.. 650 பேருக்கு தோராயமாக இளநி மற்றும் கருப்புசாறு சாப்பிடுகின்றார்கள் என்று வைத்துக்கொள்வோம்..650 இன்டு 60 என்றாலும் ஒரு நாளைக்கு நாற்பதாயிரம் வருகின்றது…
1200 தியேட்டர்கள் தமிழ் நாட்டில் இருக்கின்றன… அதில் 650 தியேட்டர் ஒரு நாளைக்கு நாற்பதாயிரம் ரூபாய்… விற்றால் இரண்டு கோடியே ஐம்பது லட்சம் கிடைக்கும்…
அதே ஒரு மாதத்துக்கு என்றால்…???
75 கோடி கிடைக்கும். அதாவது ஒரு மாதத்துக்க எழுபத்தி ஐந்து கோடி வர்த்தகம்…யாரோ பன்னாட்டு கம்பெனிக்கு கிடைப்பதற்கு பதில்… அது நமது ஏழை விவசாயிகளுக்கு கிடைக்கட்டும் என்ற நல்ல எண்ணத்தில்… தனது தியேட்டரில் இளநி மற்றும் கருப்புசாறு விற்பதாக தெரிவிக்கின்றார்.. துரைராஜ் அவர்கள்…. மேலும் இதில் உள்ள சாதக பாதகங்களை ஜாக்கி சினிமாஸ் செய்திகளுக்காக ரொம்ப ஓப்பனக பகிர்ந்து கொண்டார்..
நமது நாட்டு விவசாயிகளுக்கு மறைமுகமாக கேளிக்கை மூலம் உதவி செய்ய முதல் படியை எடுத்து வைத்துள்ளார்… அது மட்டுமல்ல… கோக் பெப்சி லாபி என்பதும் அதை முறியடிப்பது என்பதும் சாதாரண விஷயம் இல்லை…
,இளநி கருப்பு சாறு விற்கும் விஷயத்தில் அவருக்கும் நமது ஆதரவினை கொடுப்பது நமது கடமையாகும்…
வீடியோ பிடித்து இருந்தால் லைக் மற்றும் ஷேர் செய்யவும்..
கிருஷ்ணாலயா தியேட்டர் ஓனர் துரை அவர்கள் பெப்சி கோக்கிற்கு பதில் தனது தியேட்டரில் இளநி விற்பதால் ஏற்படக்கூடிய சாதக பாதகங்களை இந்த பேட்டியின் மூலம் வெளிப்படுத்தி இருக்கின்றார்.
ஜாக்கிசேகர்
https://www.youtube.com/watch?v=yjjEo-lsrFk