பைரவா திரை விமர்சனம்

கத்தி, துப்பாக்கி , தெறி போன்ற திரைப்படங்கள் மூலம் காமன் ஆடியன்ஸ் ரசனையை தன் பக்கம் இழுத்துக்கொண்ட விஜய் பைரவா திரைப்படத்தின் மூலம் காமன் ஆடியன்ஸ் ரசிகனை தன் பக்கம் தக்க வைத்துக்கொண்டுள்ளாரா? அதே போல அழகிய தமிழ் மகன் திரைப்படத்தில் முதல் வாய்ப்பை பெற்ற இயக்குனர் பரதன் விஜய்யை வைத்து இயக்கி இருக்கும் இரண்டாவது திரைப்படம் பைரவா… அவருக்கு கிடைத்த இந்த அறிய வாய்ப்பை திறம்பட பயண்படுத்தி இருக்கின்றரா இல்லையா என்பதை இந்த விமர்சனத்தில் பார்த்து விடலாம்.

பைரவா திரைப்படத்தின் கதை என்ன.?

பேங்க் மேனேஜர் ஒய்ஜி மகேந்திரனிடம் விஜய் பேங்க் கலெக்ஷ்ன் ஏஜென்டாக பணிபுரிகின்றார்… வராத கடன்களை வாங்கி வருவதில் கில்லி… மகேந்திரன் மகளும் கீர்த்தி சுரேஷூம் நண்பர்கள்.. சோ நண்பி திருமணத்துக்கு திருநல்வேலியில் இருந்து கீர்த்தி சுரேஷ் சென்னைக்கு புறப்பட்டு வருகின்றார்.. சென்னைக்கு வந்ததும் வராததுமாய் ஒரு பிரச்சனைய சந்திக்கின்றார்.. அந்த பிரச்சனையில் விஜய்யும் வேலை வெட்டியை விட்டு விட்டு அதில் பங்கேற்கிறார்.. அந்த பிரச்சனையில் இருந்து கீர்த்தியும் விஜய்யும் வந்தார்களா? இல்லையா? என்பதே பைரவா திரைப்படத்தின் கதை.

விஜய், கீர்த்தி சுரேஷ் போன்றவர்கள் சிறப்பாக செய்து இருந்தாலும் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராக போய் விடுகின்றது.. காரணம் வலுவில்லாத திரைக்கதை. தனியார் மருத்துவ கல்லூரி அதில் மாணவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என போகின்ற போக்கில் பேசினாலும்… ஒரு மாஸ் ஹீரோ படத்தில் இவ்விதமான காட்சிகள் வைத்ததில் பெருமை கொள்கிறேன்..
சதிஷ் முன் பாதியில் பலம் சேர்க்கின்றார்.அதே போல பின் பாதியில் தம்பிராமைய்யா ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் போல பயண்படுத்தி இருக்கின்றார்கள். ஜெகபதிபாபு கிளிஷேவான அதே வில்லன்..அவ்வளவுதான்.. டேனியல் கொஞ்சம் கவனம் ஈர்க்கின்றார்.

படத்தில் ஒரு பாடல் கூட நன்றாக இல்லை.. சந்தோஷ் நாரயணன்.. மெலடியும் சரியாக இல்லை. பட்டைய கிளப்பும் பாடலும் இதில் சோபிக்கவில்லை என்பதுதான் கொடுமை.

அதே போல கோயம்பேடு பிளாஷ்பேக் சீன் செம லென்தி….அதற்கு இவ்வளவு நீட்டி முழங்கி இருக்க வேண்டிய தேவையில்லை…
இந்த திரைப்படத்துக்கு ஜாக்கி சினிமாஸ் அளிக்க கூடிய மதிப்பெண்…

2.5/5

விஜய் ரசிகர்களுக்கு ரொம்ப பிடிக்கலாம்.. ஆனால் காமன் ஆடியன்சுக்கு இந்த திரைப்படத்தின் தொய்வான திரைக்கதை அயற்சியை கொடுத்தாலும்… பொங்கலுக்கு வேறு எந்த படமும் இல்லாத காரணத்தால் நிச்சயம் இந்த திரைப்படம் கலெக்ஷனை அள்ளும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை…  டைம்பாஸ் மூவி…

 

https://www.youtube.com/watch?v=VnLwg_Zu00I

Previous articleThe Creator with Midas Touch – Documentary on Director Panchu Arunachalam Screened @ 14 CIFF
Next articleசென்னை மெரினா கடற்கரை சாலையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மக்கள் வெள்ளம். நான்காம் நாள்