மாப்பாணர் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ”யாகன்” என்ற படம் உருவாகி வருகிறது. இதில் சஜன் என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் புதுமுக இயக்குனர் வினோத் தங்கவேலு.
கிராமங்களில் நடைபெறும் பல வன்முறை சம்பவங்களுக்கு அடிப்படையே ஒருத்தொருத்தர் புரிந்துகொள்ளாமல் மோதுவதும், அந்த மோதலால் ஏற்படும் இழப்பு எத்தகையது என்பதையும் அழுத்தமாகச் சொல்லும் படைப்பாக உருவாகி வருகிறது யாகன். தான் சம்பந்தமேபடாத ஒரு அவமானம் வில்லனுக்கு நிகழ்கிறது. அந்த அவமானத்துக்கு ஹீரோவின் குடும்பமே காரணம் எனப் புரிந்துகொள்ளப்படுவதால் ஹீரோவின் குடும்பம் சிதைந்துபோகிறது… இழப்புகளைச் சந்திக்க நேர்கிறது. அதற்கு ஹீரோ என்ன தீர்வு காண்கிறான் என்று போகிறது பரபரப்பான திரைக்கதை.
சிறுவர்களாக இருக்கும்போது அப்பாவின் விரலை விடாமல் பிடித்து நடக்கும் மகன், கொஞ்சம் வளர்ந்தவுடன் அப்பாவுக்கும் மகனுக்குமான அன்னியோன்யத்தில் தானாகவே இடைவெளி விழுந்துவிடுகிறது. அது வயது காரணமாகவோ அல்லது இருவருக்கும் தேவைப்படும் தனிமை காரணமாகவோ இருக்கலாம். ஆனால் இந்த படத்தில் அப்பாவும் மகனும் எவ்வளவு அன்னியோன்யமாக இருக்கிறார்கள்.. அப்பாவும் மகனும் எவ்வளவு தூரம் அன்பாக இருக்கமுடியும் என்பதைக் காட்டியிருக்கிறார்கள்.
அப்பாவாக இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் நாம் பார்த்துக்கொண்டிருக்கும் அப்பாக்களுக்கு மாற்று அப்பா கிடைத்துவிட்டார் என சந்தோசப்பட்டுக்கொள்ளலாம். கதாநாயகன் சஜன் சிதம்பரத்தை பூர்வீகமாகக் கொண்டவர். கதாநாயகியாக அஞ்சனா கீர்த்தி நடிக்கிறார். முனீஸ் ராஜா, தவசி, பாவா லட்சுமணன், ராஜேந்திர நாத், ரிந்து ரவி, டெலிபோன் ராஜ், தெனாலி, கிஷோர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
அப்பா மகனுக்குமான நெருக்கத்தை அன்பை அன்னியோன்யத்தை இதற்கு மேல் யாராலும் வார்த்தைகளால் வடித்துவிட முடியாது என்ற அளவில் நா. முத்துக்குமார் எழுதியுள்ளார். இந்த பாடலை நா. முதுக்குமாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்திற்கு சமர்ப்பணம் செய்ய இருக்கிறது படக்குழு. இசையமைப்பாளர் நிரோ பிரபாகரன் கூறும்போது, இந்தப் பாடலை கேட்கும் ஒவ்வொரு மகனும் தன் தந்தையை நூறு மடங்கு நேசிக்கத் தொடங்கிவிடுவான். அவர் எழுதி இந்தப் பாடலை ஒலிப்பதிவு செய்யும்போதே எங்களில் பலருக்கு கண்ணீர் வந்துவிட்டது. விரைவில் ஆடியோ வெளியீடு நடக்க இருக்கிறது. அப்போது இந்தப் பாடலைக் கேட்கலாம் என்றார்.
யாகன் படத்தின் ஒளிப்பதிவை கவனிக்கிறார் மகேஷ்.T. எடிட்டிங் செய்கிறார் சண்முகம். பாடல்களை நா. முத்துக்குமார், கபிலன், பத்மாவதி, அருண் பாரதி ஆகியோர் எழுதியுள்ளனர். தயாரிப்பு மேற்பார்வை தினேஷ் சுப்பிரமணியம்.
மாப்பாணர் புரொடக்சன்ஸ் சார்பாக ”யாகன்” படத்தை மிகுந்த பொருட்செலவில் தயாரித்து வருகிறார் யோகராசா சின்னத்தம்பி. படம் வேகமாக வளர்ந்து வருகிறது,