தமிழ்நாடு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்கம் பொதுக்குழு நிகழ்வு

தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடனக்கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்கத்தின் பொதுக்குழு இன்று (8 ஜனவரி) கிருஷ்ண கான சபாவில் இனிதே நடைபெற்றது.

தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடனக்கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்க தலைவர் திரு.ஷோபி பவுல்ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திரு. சுந்தரம் மாஸ்டர், திருமதி. புலியூர் சரோஜா, திரு. தருண் குமார், திரு. சீனு, திருமதி. கிரிஜா ரகுராம், திருமதி. மாதிரி பல்ராம், திரு. ஜான் பாபு ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

பொதுகுழுவில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்:

1. திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்கம் இனி முதல் “தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடனக்கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்கம்” எனப் மாற்றம் செய்யப்பட்டு சங்கத்தின் புதிய முத்திரை அறிமுகம் செய்யப்பட்டது.

2. தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடனக்கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்கம் தற்போது 50வது (பொன் விழா) ஆண்டை அடைந்ததால், இந்த ஆண்டு மிக பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்த வேண்டும் என உறுதி மொழி எடுக்கப்பட்டது.

3. தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடனக்கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்க மொத்த உறுப்பினர்களுக்கு இலவச மருத்தவ காப்பீடு.

4. தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடனக்கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்கத்தின் (1967 முதல் 1979 வரையிலான) மூத்த உறுப்பினர்களுக்கும், மூத்த நடன இயக்குனர்களுக்கும் கேடயம் அளித்து அவர்களை கௌரவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் செயலாளர் திரு.Y.சிவா, பொருளாளர் திரு.K.புவனசங்கர் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் ஏராளமான நடன இயக்குனர்களும், நடன கலைஞர்களும் கலந்து கொண்டனர்.