சூப்பர்ஸ்டார் ரஜினியின் வாழ்த்து எனக்கு ஆஸ்கார் விருதுக்கும் மேல் – RK.சுரேஷ்

257

ஸ்டுடியோ 9 நிறுவனம் சார்பாக RK.சுரேஷ் தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான “தர்மதுரை” திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.

நூறு நாட்கள் கடந்து சாதனை படைத்த தர்மதுரை படக்குழுவினரை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று சந்தித்து பேசி வாழ்த்து கூறினார்.

சூப்பர்ஸ்டார் ரஜினியுடனான உரையாடல் தன் வாழ்நாளில் மறக்கமுடியாத நிகழ்வு என்று நடிகர் மற்றும் தயாரிப்பாளர் RK.சுரேஷ் கூறினார்.

அவர் கூறுகையில், “சிறு வயது முதல் சூப்பர்ஸ்டாரின் படங்களை பார்த்து வளர்ந்தவன் நான். அவர் நடிப்பில் வெளியாகும் படங்களை பார்க்க முட்டி மோதி கொண்டு டிக்கேட்டுகளை வாங்கி அவரை வெள்ளித்திரையில் பார்த்து வியந்தவன் நான்.

தாரைத்தப்பட்டை படத்தில் எனது நடிப்பு அவரை மிகவும் கவர்ந்ததாகவும், மேலும் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் தான் நடிப்புத்திறனை முழுமையாக வெளிக்கொண்டுவர முடியுமென்றும், அதை நான் சரியாக செய்துள்ளேன் என்று கூறினார்.

என் தயாரிப்பில் உருவான தர்மதுரை படத்தின் நல்ல தன்மைகளை கூறி படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் நான் மேன்மேலும் பல படங்களில் நடித்து சிறந்த நடிகனாய் வரவேண்டும் என்று ஆசிக்கூறினார்.

நான் கடவுளாக நினைத்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை இன்று நேரில் பார்த்ததும் அவரிடம் ஆசிர்வாதம் பெற்றதும் எனக்கு ஆஸ்கார் விருதுக்கும் மேல்” என்றார் RK.சுரேஷ்.

Previous articleLightman Movie Working Stills
Next articleVeteran Athletics Association 35th Championship Inaugural Photos