ஜனவரி 25 முதல் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய ஹ்ரித்திக் ரோஷனின் “பலம்”

காட்ஸ் ஆப் ஈஜிப்ட், பேட்மேன் vs சூப்பர்மேன், மேகானிக் – ரீசரக்ஷன் உள்ளிட்ட பல பிரபல ஆங்கிலப்படங்களையும், பாகி, அசார், உத்டா பஞ்சாப், ரஸ்டம் உள்ளிட்ட பல பிரபல ஹிந்தி படங்களையும் வினியோகம் செய்த E4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தற்போது ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் சஞ்சய் குப்தா இயக்கத்தில் உருவான “பலம்” (காபில் – தமிழ் பதிப்பு) படத்தை வெளியிடுகின்றது.

கதை:

31 வயதான பிண்ணனி குரல் கலைஞனான ரோஹன் தனது பெரும்பான்மையான வாழ்கையை ஸ்டுடியோக்களிலும், இரவை தனது இல்லத்திலும் கழிக்கிறான்.

பிறப்பிலேயே பார்வையற்றவனான ரோஹனுக்கு அனைவரும் வாழும் ஒரு சாதரணமான வாழ்க்கையை மேற்கொள்வதே அவன் வாழ்வின் கனவாக இருக்கிறது. ஒரு தருணத்தில் சுப்ரியாவை சந்திக்க நேரும் அவன் அவள் மீது காதல் வயப்படுகிறான்.

ரோஹனின் நேர்மையும், தன்னம்பிக்கையும் அவளை கவர்கிறது. ஒருவர் மீது ஒருவர் பேரன்பை வைத்திருக்கும் நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். இவர்கள் இருவரும் இணைந்திருந்தால் வாழ்வில் எதுவும் சாத்தியமே என்ற நிலையில் எதிர்பாராத விதமாக ரோஹன், சுப்ரியாவை பிரிய நேரிடுகிறது.

சுப்ரியாவின் பிரிவு ரோஹனின் வாழ்க்கையை இருளில் தள்ளி தனிமை படுத்துகிறது. சுப்ரியா பிரிவின் காரணத்தை ஆராய முற்ப்படும் ரோஹனுக்கு, தன்னை சுப்ரியா பிரிந்ததற்கான உண்மை புலப்படுகிறது.

தன்னை தனிமை படுத்தியவர்களுக்கெதிரான யுத்தத்தில் ஈடுபடுகிறான் ரோஹன். ரோஹன் லட்சியத்தை அடையவதை எந்த ஒரு சக்தியும் தடுக்க போவதில்லை.

Cast:

Hrithik Roshan
Yami Gautam
Ronit Roy
Rohit Roy
Suresh Menon

Crew:

Produced by: Rakesh Roshan
Directed by: Sanjay Gupta
Music: Rajesh Roshan
Lyrics: Kumaar
DOP: Sudeep Chaterji
Action Director: Peter Hein
Written by: Vijay Mishra
Sound: Resul Pookutty
Dialogue: Sanjay Masoom
Editor: Akiv Ali
Casting: Mukesh Chhabra
Production Company – Filmkraft Productions Pvt. Ltd
Release (Tamilnadu) – E4 Entertainment
Released Date: 25th January, 2017