இசையமைப்பாளராகவும், பாடகராகவும் வெற்றிப்பதையில் பயணித்துக்கொண்டிருந்த ஜீ.வி.பிரகாஷ், நடிகராய் அரிதாரம் பூசி கேமரா முன் தோன்றினார். சாதக, பாதக விமர்சனங்களைப் பற்றி கவலைப்படாமல் காதல், காமெடி, த்ரீல்லர் படங்களில் நடித்து இன்றைய கோலிவுட்டின் ஒரு பரபரப்பான வெற்றிப் பட ஹீரோவாக வலம்வரும் ஜீ.வி.பிரகாஷ், இதுவரை தான் நடித்து வந்த படங்களின் சிறு சாயலில்லாமல் அவருக்கேற்ற ஒரு பக்கா கமர்ஷியல் படத்தில் நடிக்கிறார். அதர்வா நடித்து வெளிவந்த, மாபெரும் வெற்றிப் படமான “ஈட்டி” படத்தின் இயக்குனர் ரவிஅரசு இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.
Common man present’s சார்பில் “ஆரஞ்ச் மிட்டாய், றெக்க” படங்களை தயாரித்த பி.கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்திற்கான ஃபோட்டோ ஷுட் புத்தாண்டின் முதல் நாளான 1ஆம் தேதி நுங்கம்பாக்கம் செட் ஃபேரில் நடந்தது. ஃபோட்டோ ஷுட் முடிந்து, எடுத்த புகைப்படங்களைப் பார்த்து மகிழ்ந்த ஜீ.வி.பிரகாஷ், தன் மகிழ்ச்சியை இயக்குனரிடமும், தயாரிப்பாளாரிடமும் பரிமாறிக்கொண்டார். பெயரிடப்படாத இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பொங்கல் தினத்தில் வெளியிடயுள்ளனர்
இணை தயாரிப்பு; சுபா கணேஷ்
மக்கள் தொடர்பு; பி.கோபிநாதன்