இயக்குநர் கே எம் சர்ஜுன் இயக்கத்தில், ‘பிக் பிரிண்ட் பிச்சர்ஸ்’ ஐ பி கார்த்திகேயன் தயாரித்து இருக்கும் குறும்படம் – ‘லக்ஷ்மி’. தினசரி வாழ்க்கையில் அனைவரும் சந்திக்கும் ஒரு சராசரி பெண்ணின் வாழக்கையை மையமாக கொண்டு நகரும் ‘லக்ஷ்மி’ குறும்படத்தில், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
கணவன், மகன் என குடுமபத்திற்காக ஓயாமல் ஓடி கொண்டிருக்கும் ஒரு சராசரி பெண்ணுக்கு, சராசரியாக தன் கணவனிடத்தில் இருந்து கிடைக்கும் காதல், பாசம், அன்பு என இவை எதுவும் கிடைக்காமல் போகிறது. வாழ்க்கையே வெறுத்து போகும் அந்த சூழ்நிலையில், லக்ஷ்மியின் மனம் காதலை தேடுகிறது. அவளது மனம் சொல்லும் பாணியில் லக்ஷ்மி பயணிக்கிறாளா? அல்லது சமூதாயம் காட்டும் பாதையில் பயணிக்கிறாளா? என்பது தான் இயக்குநர் சர்ஜுன் இயக்கி இருக்கும் லக்ஷ்மி குறும்படத்தின் கதை.
“லக்ஷ்மி குறும்படத்தை இயக்கும் போது, அது நிச்சயமாக சர்வேதேச அங்கீகாரத்தை பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. ஆனால் நாங்கள் நினைத்ததை விட தற்போது அமோக வரவேற்பை சர்வதேச குறும்பட விழாக்களில் எங்களின் லக்ஷ்மி பெற்று இருக்கிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற சினி பெஸ்ட் விழாவில், லக்ஷ்மி குறும்படம் அரை இறுதி சுற்றில் வெற்றி பெற்றது, எங்கள் ஒட்டுமொத்த குழுவினரையும் மேலும் உற்சாக படுத்தியது. அதனை தொடர்ந்து எண்ணற்ற சர்வேதச குறும்பட விழாக்களில் எங்களின் ‘லக்ஷ்மி’ குறும்படம் தேர்ந்தெடுக்க பட்டிருக்கிறது.
எங்களுக்கு உறுதுணையாய் இருந்த எங்களுடைய தயாரிப்பாளர் ‘பிக் பிரிண்ட் பிச்சர்ஸ்’ திரு கார்த்திக் அவர்களுக்கும், லக்ஷ்மி குறும்படத்தை சர்வதேச அளவில் கொண்டு போய் சேர்க்க உழைத்த திலானி ( Viewfinder Consulting) அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்…” என்று கூறுகிறார் இயக்குநர் கே எம் சர்ஜுன்.
இந்நாள் வரை லக்ஷ்மி குறும்படம் கடந்த வந்த சர்வதேச திரைப்பட விழாக்கள்:
Canadian Diversity Film Festival – Oct 2016, The Great Indian Film & Literature Festival – Nov 2016, Mumbai Shorts International Film Festival – Dec 2016 – Winner – Special Mention Award, Cine Pobre Film Festival, Mexico – Dec 2016 – competitor for ‘Best Self-Funded Film’, Cineframe Short International Film Festival, Kolkata – Dec 2016 and Chatrapati Sivaji International Film Festival, Delhi – Dec 2016.