நீட்டான திரில்லர் படங்களுக்கு தமிழில் எப்போதும் வரவேற்பு உண்டு… ஆனால் அப்படியான திரில்லர் திரைப்படங்களை அம்மா இறந்ததுக்கு பிறகு மானஸ்த்தனாக அதிமுகவில் இருந்து விலகியவர்களை போல விரல் விட்டு எண்ணி விடலாம்….
ஒரு பரபரப்பான திரில்லர் எப்படி இருக்க வேண்டும்..??? கொரியன் திரைப்படங்களில் மெமரிஸ் ஆப் மர்டர் மற்றும் ஐ சா த டெவில் திரைப்படத்தை போல இருந்து தொலைய வேண்டும்… ஆனால் நம் திரைப்படத்தில் நாயகி கவர்ச்சி உடையில் வந்து பார்வையாளனை உசுப்பேற்றுவார்.. கொலை ரத்தம் உறையவைக்கும் பயத்தை தொலைத்து விட்டு நாயகியின் உடை இன்னும் கொஞ்சம் கீழ் இறங்காத என்று பதபதப்பை இயக்குனரும் கேமராமேனும் பார்வையாளனுக்கு ஏற்படுத்த முயல்வார்கள்… அப்பாவி கொலையை அதிர்ச்சியோடு பார்க்கும் முன் அடுத்து நாயகி எப்போது திரையில் தோன்றுவார் என்ற பதபதப்பை உருவாக்கிவிடுவார்கள்…
நடுவில் ஒரு டாஸ் மார்கில் ஒரே காஸ்ட்யூம் புடவையில் ஐட்டம் டான்சில் சினிமா கனவுகளோடு கோடம்பாக்கத்துக்கு வந்த பெண் மார்பை வியர்வையுடே இஷ்டத்துக்கு குலுக்கி ஆடுவார்.. நடுவில் அந்த பாடலின் டாஸ்ஸ் மாஸ்டர் அவர் பங்கிற்கு ஒரு கஷ்டமான் ஸ்டெப் என்று நினைத்துக்கொண்டு அட்ராசிட்டி ஸ்டெப்பை போடுவார்…
இப்படியான திராபையான மொக்கை திரில்லர் தமிழ் திரைப்படங்களின் இலக்கனத்தை 21 வயதில் கார்த்திக்நரேன் என்ற மெக்கானிக்கல் என்ஜினியரிங் மாணவர் தகர்த்து துவருவங்கள் பதினாறு என்ற கிரைம் திரில்லர் திரைப்படத்தை நீட்டான திரில்லராக இயக்கி அசத்தி இருக்கின்றார்…
ஜேக்ஸ் பிஜாயின் இசை படத்துக்கு பக்க பலம்…அதே போல பாடல் ஒன்று வைக்கலாம் என்று டார்ச்சர் செய்யாது இசையமைத்த விஷயத்துக்கே பாராட்டலாம்…
கேமராமேன் சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவில்… காட்சிகள் மற்றும் கோணங்கள் அருமை முக்கியமாக ரகுமான் போலிஸ் ஸ்டேஷனில் என்டர் ஆகும் காட்சிகள்.. சிங்கிள்ஷாட்… அதே போல வைஷ்னவியிடம் விசாரிக்கும் காட்சிகளும் சிங்கிள் ஷாட்… வாழ்த்துகள்… அதே போல காலையில் செம மழையில் கொலை பத்து மணிக்கு விசாரிக்க ஸ்பாட்டுகு போகும் போது மே மாத வெயிலில் சாலைகள் காய்ந்து இருப்பது போல எடுத்து இருக்காமல் கவனத்தோடு எடுத்து இருக்கலாம்…
அதே போல எடிட்டிங் ஸ்ரீஜித் சாரங்… முக்கியமாக காட்சிகளில் குளோசப் அவசியம்.. முக்கியமாக டிக்கியில் இருந்து பினத்திடம் இருந்து ஆரஞ்சு கலர் போன் எடுத்து பாக்கெட்டில் வைப்பதற்கு குளோஸ் அப் அவசியம்….
இருப்பினும் ஆண்டு இறுதியில் நீட்டான திரில்லரை கொடுத்ததோடு தமிழ் சினிமாவின் நம்பிக்கை இயக்குனர்கள் பட்டியலில் இணைந்த வகையில் இயக்குனர் கார்த்திக் நரேனுக்கு ஜாக்கி சினிமாஸ் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.