திரையுலகின் ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்து இன்று வரை, கேரளாவிற்கும், தமிழ் திரையுலகிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. குறிப்பாக கதாநாயகிகள் என்று வரும் போது, அந்த உறவு மேலும் வலுவாக இருக்கின்றது என்பதை உறுதியாகவே சொல்லலாம். அந்த வகையில் தற்போது கேரளாவில் இருந்து உதயமாகி, வீரா திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்து இருக்கிறார் ஐஸ்வர்யா மேனன். கேரளாவை பூர்விகமாக கொண்டு இருந்தாலும், பொறியியல் பட்டதாரியான ஐஸ்வர்யா மேனன் பிறந்த வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டில் தான்.
“என்னுடைய சிறு வயது முதல் நடிப்பின் மீது எனக்கு அளவுகடந்த ஆர்வம் உண்டு. கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் நான் நடித்திருந்தாலும், தமிழ் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய நீண்ட நாள் கனவு. அந்த கனவு தற்போது வீரா திரைப்படம் மூலம் நிஜமாகி இருக்கின்றது. இந்த படத்தில் எனக்கு மிக வலிமையான கதாபாத்திரம். தமிழ் திரையுலகில் பல வெற்றி படங்களை தயாரித்து இருக்கும் ஆர் எஸ் இன்போடைன்மெண்ட் நிறுவனம் மூலம் நான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாவது, எனக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது. இன்னும் இரண்டு திரைப்படங்களில் நடிப்பது பற்றிய பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது…