மதுரை மணிவாசகம் என்கிற பாபுஜீ

சினிமாவில் அத்தி பூத்தாற்போல சில கேரக்டர்களும், பெயர்களும் தங்கும் அப்படி சமீபத்தில் ரசிகர்கள் மனசில் அப்பிய பெயர் விஜய்சேதுபதி நடித்த “றெக்க” படத்தில் வந்த மதுரை மணிவாசகம்.

பாண்டிச்சேரியில் புகழ்பெற்ற ஹோட்டல் அதிபர் பாபுஜி. இவர் ஹோட்டல் பெயர் தெரியாத சினிமா பிரபலங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

“றெக்க” படத்திற்கு பிறகு இவருக்கு வரிசைகட்டி நிற்கின்றன படங்கள். விரைவில் திரைக்கு வரவிருக்கும் விக்ரம் பிரபு நடித்த “வீரசிவாஜி” படத்தில் பெரும் பணக்காரனாகவும், பெண் பித்தராகவும் நடித்துள்ளார்.

இதுதவிர பாக்யராஜ் உதவியாளர் A.T.மதுராஜ் இயக்கத்தில் தர்மபுரி மாவட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கிறார்.

ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் வினய், தமன் நடிக்கும் “நேத்ரா” படத்தில் மூன்று வில்லன்களில் முக்கிய வில்லனாக நடிக்கிறார்.

திருக்கடல்உதயம் தயாரித்து ஷெரின் நடிக்கும் “ஜீவஆத்மா”பிரபல வழக்கறிஞர் அசோக் ராஜ் இயக்கும் “வாய்தா”, ஒன்பதுலகுரு டைரக்டர் பி.டி.செல்வக்குமார் இயக்கும் “காசேதான் கடவுளடா” படம் என வரிசை கட்டி நிற்கின்றன படங்கள். இதுதவிர முக்கிய இயக்குனர்களின் படங்களில் பேச்சு வார்த்தை நடைபெற்றுவருகிறது. அடுத்த வருஷத்தில் பிஸியான ஆர்ட்டிஸ்ட் வரிசையில் முதல் இடத்தில் பாபுஜி நிற்கிறார்.

Previous articleVishnu Vishal Studioz Production No.3 Movie Pooja Stills
Next articleஉலகத்தில் மிகபெரிய சாதனைகளை புரிந்தவர்கள் ” நடு பெஞ்ச் மாணவர்கள் ” தான்