“2M cinemas” K.V. சபரீஷ் தயாரிப்பில், பார்த்தசாரதி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ரோட் திரில்லர் ஜானரில் உருவாகும் திரைப்படம் “கா – வியன்”. இந்த படம் தெலுங்கில் “வாடு ஒஸ்தாடு” என்ற பெயரில் உருவாகி வருகிறது. ஷாம் நாயகனாக நடிக்க, மனம் கொத்திப் பறவை ஆத்மியா, ஸ்ரீதேவி குமார் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். மற்றும் ஸ்ரீநாத், ஹாலிவுட் நடிகர் ஜஸ்டின், அலெக்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
முதல்கட்ட படப்பிடிப்பு பிரம்மிப்பின் தலைநகரமான அமெரிக்காவின் “லாஸ் வேகாஸில்” (LAS VEGAS ) நடைபெற்று முடிவடைந்து விட்டது. இறுதிகட்ட படிப்பிடிப்பு வருகிற டிசம்பர் 10 ம் தேதி சென்னையில் பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படமாக்கப்பட உள்ளது.