நான்கு கதாநாயகிகளுடன் களமிறங்கும் கலை வாரிசு

239

களத்தூர் கிராமம் திரைப்படத்திற்கு பிறகு தயாரிப்பாளர் S A ராஜ்கண்ணுவின் வாரிசு மிதுன்குமார் இரண்டாவது திரைப்படத்திற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் N L ஸ்ரீ அவர்கள் இயக்குகிறார், இவர் வேளச்சேரி மற்றும் வெற்றிவேல் ஆகிய படங்களில் உதவிஇயக்குநராக பணிபுரிந்தவர், இவர் திரைப்பட கல்லூரியில் தங்கம் வென்ற மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கதைப்படி படத்தில் நான்கு கதாநாயகிகள் என்பதால் சில  முன்னணி கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.மேலும் யோகிபாபு, சாம் ஆண்டர்சன், அர்ஜுன், மதுபாலா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தில் பல முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் பணிபுரிகின்றனர், இசை தெகிடி,சேதுபதி திரைப்படங்களின் இசையமைப்பாளர் நிவாஸ் K பிரசன்னா, ஒளிப்பதிவு-புஷ்பராஜ், படத்தொகுப்பு சதுரங்கவேட்டை, பாம்புசட்டை போன்ற படங்களின் படத்தொகுப்பாளர் SP ராஜா சேதுபதி மேற்கொள்கிறார், கலை இயக்குநர் ஆனந்தமணி இவர் சலீம், பிச்சைக்காரன் திரைப்படங்களுக்கு கலை இயக்குநராக பணிபுரிந்தவர், சண்டை பயிற்சி சூது கவ்வும், ஜிகர்தண்டா, சலீம், போன்ற வெற்றி திரைப்படங்களின் சண்டைப்பயிற்சியாளர் பில்லா ஜெகன் மேற்கொள்கிறார்.இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகிறது.  தயாரிப்பாளர் S A ராஜ்கண்ணு 100 கதைகளுக்கு மேல் கேட்டுள்ளார், இறுதியாக களத்தூர் கிராமம் கதையை தன் மகனுக்காக தேர்ந்தெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது, இரண்டாவதாக  அவர் தன் மகனுக்காக ஒப்புக்கொண்ட கதை இதுவாகும்.இத்திரைப்படத்தை airavat entertainments என்ற மலேசிய நிறுவனம் தயாரிக்கிறது.

Previous articleKadavul Irukaan Kumaru On Location Stills
Next articleபேரண்ட்ஸ் பிக்சர்ஸ் சார்பில் s.சண்முகம் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அஞ்சுக்கு ஒண்ணு