YNOT ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் R.ரவீந்திரன் வழங்கும் புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் R.மாதவன் – விஜய்சேதுபதி நடிக்கும் “விக்ரம் வேதா”

200

தமிழ் படம், காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும், இறுதி சுற்று போன்ற வெற்றி படங்களை தயாரித்த சசிகாந்தின் YNOT ஸ்டுடியோஸ் தற்போது புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் R.மாதவன் விஜய் சேதுபதி முதன் முறையாக இணைந்து நடிக்கும் “விக்ரம் வேதா” எனும் புதிய படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றார்.

இப்படத்தில் R.மாதவன் விஜய் சேதுபதி கதாநாயகர்களாக நடிக்க இவர்களுடன் கதிர், வரலட்சுமி, “யு டர்ன்” புகழ் ஷரதா ஸ்ரீநாத், பிரேம், அச்சுயுத் குமார், “ஆண்டவன் கட்டளை” புகழ் ஹரீஷ் பெரடி, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:

ஒளிப்பதிவு – P.S.வினோத்
இசை – சாம் C.S
வசனம் – மணிகண்டன்
பாடல்கள் – முத்தமிழ்
நடனம் – கல்யாண்
படத்தொகுப்பு – ரிச்சர்ட் கெவின்
கலை இயக்குனர் – வினோத் ராஜ்குமார்
சண்டை பயிற்சி – திலிப் சுப்பராயன்
மக்கள் தொடர்பு – நிகில்
நிர்வாக தயாரிப்பு – சக்ரவர்த்தி ராமசந்திரா
தயாரிப்பு மேற்பார்வை – முத்துராமலிங்கம்
எழுத்து இயக்கம் – புஷ்கர் – காயத்ரி
தயாரிப்பு – சசிகாந்த் YNOT ஸ்டுடியோஸ்

இப்படத்தை உலகமெங்கும் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் சார்பாக R.ரவீந்திரன் வெளியிடுகிறார்.

முழுக்க முழுக்க ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இப்படத்தின் இன்று முதல் சென்னையில் துவங்கி தொடர்ந்து நடைபெறுகிறது.

Previous articleKadavul Irukaan Kumaru Stills
Next article‘ஃப்ரைடே மாஜிக் என்டர்டைன்மெண்ட்’ நிறுவனம் மூலமாக தயாரிப்பாளராக உருவெடுத்து இருக்கிறார் நடிகர் ‘நிதின்’ சத்யா