சென்னை ஸ்மாசர்ஸ் அணிக்காக பி.வி.சிந்து ரூ.39 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரின் சென்னை
ஸ்மாசர்ஸ் அணிக்காக  பி.வி.சிந்து ரூ.39 லட்சத்திற்கு ஏலம்
எடுக்கப்பட்டுள்ளார்.
 
பிரிமியர் பாட்மிண்டன் லீக் தொடருக்கான இரண்டாவது சீசனிலும் தேமுதிக
தலைவர் கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரின் சென்னை ஸ்மாசர்ஸ்
அணிக்காக பி.வி.சிந்து விளையாடுகிறார். தமிழக வீராங்கனை துளசி
உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ள சென்னை ஸ்மாசர்ஸ் அணி வெற்றிபெற கேப்டன்
விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
பிரிமியர் பேட்மின்டன் லீக் தொடருக்கான 2-வது சீசன் வரும் ஜனவரி மாதம்
ஒன்றாம் தேதி முதல் 14-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில்  டெல்லி, மும்பை,
சென்னை ஐதராபாத்,பெங்களூரு, லக்னோ ஆகிய 6 அணிகள் பங்கேற்க உள்ளன.
 
இந்த தொடருக்கான வீரர்-வீராங்கனைகளின் ஏலம் டெல்லியில் நேற்று
நடைபெற்றது. இதில் ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை
படைத்த இந்தியாவின்  பி.வி. சிந்துவை  தேமுதிக  தலைவர் கேப்டன்
விஜயகாந்தின் மகனும் சென்னை ஸ்மாசர்ஸ் அணியின் உரிமையாளருமான விஜய்
பிரபாகர்  39 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளார்.
 
கடந்த ஆண்டு நடைபெற்ற பிபிஎல் போட்டியில்  சென்னை ஸ்மாஷர்ஸ் அணிக்காக
பிவி சிந்து ஒப்பந்தம் செய்யப்பட்டார்.  சிறப்பான ஆட்டத்தை
வெளியப்படுத்திய பிவி சிந்து மும்பையில் நடைபெற்ற அரையிறுதி  போட்டியில்
வெற்றி பெற   கடுமையாக போராடினார். எனினும் எதிர்பாராத விதமாக அவரது
வெற்றி  நூலிழையில் நழுவியது.  மும்பையில் நடைபெற்ற போட்டியை கேப்டன்
விஜயகாந்த் தனது கும்பத்தினருடன் நேரில் சென்று கண்டுகளித்தார்.
 
கடந்த போட்டியில்  சென்னை ஸ்மாஷர்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை
கைப்பற்றினால் அதில் கிடைக்கும் பரிசு தொகையை சென்னை வெள்ளத்தால்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் என அணியின் உரிமையாளர் விஜய்
பிரபாகர்  அறிவித்தார் என்பது குறிப்பிடதக்கது.