ரூபி பிலிம்ஸ் ஹஷீர் வழங்கும் விதார்த் நடிக்கும் வண்டி

ரூபி பிலிம்ஸ் ஹஷீர் வழங்கும் விதார்த் நடிக்கும் “ வண்டி “  “ Journey With Duttu” திரைப்படத்தின் படப் பிடிப்பு பூஜையுடன் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ராஜேஷ் பாலா எழுதி இயக்கும் இப்படத்தில் விதார்த் கதாநாயகனாக நடிக்கிறார் கதாநாயகியாக சாந்தினி தமிழரசன் நடிக்கிறார். இப்படத்தில் கதாநாயகனின் நண்பனாக கிஷோர் , ஸ்ரீ ராம் கார்த்திக் ஆகியோர் நடிக்கின்றனர். தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் வித்யாசமான பாத்திரமேற்று நடித்து வரும் ஜான் விஜய் இப்படத்தில் எஸ்.ஐ யாக முக்கிய காதபாத்திரமேற்று நடித்துள்ளார். சூது கவ்வும் போன்ற பல்வேறு படங்களின் மூலம் தனக்கென்று ஒரு முத்திரை பதித்த நடிகர் அருள் தாஸ் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். கணேஷ் பிரசாத் இரண்டாம் கதாநாயகனாக நடிக்க நகைச்சுவை காட்சிகளில் கலக்க “ லொள்ளு சபா “ சாமிநாதனும் , மதன் பாபும் ஒன்று சேர்கிறார்கள்.
ராகேஷ் நாராயணன் ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்துக்கு சுராஜ் எஸ்.குரூப் இசையமைக்க    ரீசால் ஜெய்னி படத்தொகுப்பை  கவனிக்கிறார்  , கலை – மோகன மகேந்திரன் , சண்டை பயிற்சி – சிறுத்தை கே. கணேஷ், உடையலங்காரம் – சாரா விஜய் குமார் , பாடல்கள் – சிநேகன் , கானா பாலா. இணை இயக்கம் – வி.அரசு , ஸ்டில்ஸ் – ஆனந்தன் , மக்கள் தொடர்பு ரியாஸ் கே. அஹமது ,  தாயரிப்பு நிறுவகம் – தீபக் மோகன் , டிசைன் ரஞ்சித்.
காமெடி திரில்லராக உருவாகி வரும் இப்படத்தின் படபிடிப்பு ஒரே கட்டமாக  நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடதக்கது.