‘யூ’ சான்றிதழை பெற்று இருக்கிறது ‘உள்குத்து’ திரைப்படம்

தினேஷ் – நந்திதா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘உள்குத்து’ திரைப்படம் தற்போது ‘யூ’ சான்றிதழை பெற்று இருக்கிறது.  ‘திருடன் போலீஸ்’ மற்றும் ‘ஒரு நாள் கூத்து’ ஆகிய வெற்றி  திரைப்படங்களை தொடர்ந்து அதிரடியில் காலடி எடுத்து வைத்திருக்கிறார் ‘கெனன்யா பிலிம்ஸ்’ ஜெ செல்வக்குமார். கார்த்திக் ராஜு இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த ‘உள்குத்து’  திரைப்படம் தினேஷை முற்றிலும் அதிரடி நாயகனாக சித்தரிக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது…’விசாரணை’ திரைப்படத்தில் தன்னுடைய யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி, அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்ற தினேஷிற்கு, இந்த உள்குத்து திரைப்படம் அடுத்த ஒரு மைல் கல்லாக இருக்கும். தமிழ் திரையுலகில் மிகவும் நம்பகமான இசையமைப்பாளராக வளர்ந்து வந்து கொண்டிருக்கும் ஜஸ்டின் பிரபாகரன்,  ‘உள்குத்து’ திரைப்படத்திற்காக இசையமைத்திருக்கும் “பெசையும் யசையா….” பாடல் அனைவரிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்று வருவது மேலும் சிறப்பு.
“உள்குத்து திரைப்படம் ‘யூ’ சான்றிதழை பெற்று இருப்பது எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது…. ரசிகர்கள் மத்தியிலும், வர்த்தக உலகிலும் மிக பெரிய வெற்றி பெற தேவையான அனைத்து சிறப்பம்சங்களையும் எங்களின் ‘உள்குத்து’ திரைப்படம் நிறைவாக பெற்று இருக்கிறது…..” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்   ‘கெனன்யா பிலிம்ஸ்’ ஜெ செல்வக்குமார்.