ROAD SHOW எண்டர்டெயின்மெண்ட் எடின் வழங்கும் தண்டனை தூரமில்லை

ROAD SHOW எண்டர்டெயின்மெண்ட் எடின் வழங்கும் தண்டனை தூரமில்லை. இத்திரைப்படத்தை எடிட்டிங் செய்து இயக்கியுள்ளார் சதாம் உசேன். இசை யஷ்வந்த், ஒளிப்பதிவு நரேஷ் மேற்கொண்டுள்ளனர். இத்திரைப்படத்தில் எடின் கதாநாயகனாகவும், பிரகதி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் நிர்மல், தாமரை செல்வன்,சுபாஷ்,மணிகண்டன்,பிரியங்கா,ஷர்மிளா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
 
இத்திரைப்படத்தை பற்றி இயக்குநர் சதாம் உசேன் கூறுகையில்,
                         
வாழ்க்கையில் பொருளாதார பிரச்சனைகள்  உள்ள ஐந்து நபர்கள் தங்களின் பிரச்சனைகளை தீர்க்க மலேசியாவிற்கு வேலை தேடி செல்கின்றனர்.அங்கே அவர்கள் ஒரு மர்ம கும்பலிடம் மாட்டிக்கொண்டு பல்வேறு இன்னல்களை அனுபவிக்கின்றனர். இத்தகைய சூழலிலிருந்து அவர்கள் மீண்டார்களா இல்லையா என்பதை யதார்த்தமாகவும், விறுவிறுப்பாகவும் கூறியிருக்கும் திரைப்படம்தான் தண்டனை தூரமில்லை.