ஒரு திரைப்படத்திற்கு தலைப்பிடுவது என்பது எளிதான காரியமாக இருந்தாலும், அந்த திரைப்படம் முழுவதுமாக உருவாகிய பிறகு, அந்த தலைப்பை மாற்றுவது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது…. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை முழுவதுமாக பூர்த்தி செய்யுமாறு அந்த தலைப்பு இருந்தால் மட்டும் தான், அத்தகைய முயற்சி வெற்றி பெறும். அப்படி ஓர் திரைப்படமாக, வலுவான கதைக்களம், சிறந்த தொழில்நுட்பம் மற்றும் சிறந்த நட்சத்திர கூட்டணி ஆகியவற்றை கொண்டு உருவாகி இருக்கிறது ‘புரியாத புதிர்’.
‘ரெபெல் ஸ்டுடியோ’ தயாரிப்பில், ‘ஜே எஸ் கே பிலிம் கார்பொரேஷன்’ சார்பில் ஜே சதீஷ் குமார் விநியோகம் செய்யும் ‘புரியாத புதிர்’ திரைப்படத்தை, காட்சிக்கு காட்சி மிக அழகாக செதுக்கி இருக்கிறார் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி என்று சொன்னால் அது மிகையாகாது.
“ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு திரைப்படத்தின் பெயரை மாற்றுவது, சற்று சவாலான காரியம் தான். .’புரியாத புதிர்’ படத்தின் வலுவான கதைக்களத்தின் மீது நாங்கள் வைத்திருக்கும் அசையாத நம்பிக்கை, எங்களின் இந்த சவாலை வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்கிறது….நிலையான சாதனை படைக்கும் வண்ணமாக, 72 மணி நேரத்தில் பத்து லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை எங்களின் ‘புரியாத புதிர்’ படத்தின் டிரைலர் பெற்று இருப்பதே அதற்கு சிறந்த உதாரணம்….” என்று உற்சாகத்துடன் கூறுகிறார் ‘ஜே எஸ் கே பிலிம் கார்பொரேஷன்’ நிறுவனத்தின் நிறுவனர் ஜே சதீஷ் குமார்