பொதுவாக தமிழ் சினிமாவில் கிராமங்கள் என்னவாக இருக்கிறது , கிராமங்களின் தெருக்கள் என்னவாக இருக்கிறது கிராமங்களில் வாழும் மக்கள் , எப்படிப்பட்ட அடையாளமாக இருக்கிறார்கள் என்பதைப்பற்றி எனக்குள் ஒரு கேள்வி இருந்து வந்தது . முதன் முதலாக வெண்ணிலா கபடிக்குழு படம் பார்த்தபோது கிராமங்களில் இருக்க கூடிய அரசியல் , அதுவும் விளையாட்டில் இருக்கும் அரசியலை மிக அழகாக ஒரு வணிகசினிமாவில் காட்சி படுத்தியிருந்தார் சுசீந்திரன் ,
அதே போல இன்றைய கிராமங்களில் பொதுப்பயன்பாட்டிற்குள் இருக்கிற அரசு பொதுவுடைமை என்னவாயிருக்கிறது , யாருடைய சொந்தமாயிருக்கிறது என்கிற ஒரு கேள்வியிருக்கிறது , அந்தக்கேள்விக்கு இந்தப்படம் நிச்சயமாக ஒரு பதிலாக இருக்கும் என்று நம்புகிறேன் .
இந்தப்படத்தில் வரும் டிரெயிலரும் , பாடல்களும் அதை தான் திருப்பி திருப்பி சொல்ல வருகிறது . இந்த “காதல்” இருக்கிறதே அது சும்மாயிருக்காது . “மாவீரன் கிட்டு ” படத்தில் வரும் இந்த வசனம் கண்டிப்பாக சலசலப்பை உண்டுபண்ணும் .”காதல்” இந்த சமூகத்தை மாற்றியே தீரும் . சமூகத்தில் காதலால் மட்டுமே புரட்சியை உண்டுபண்ண முடியும் . என்கிற நம்பிக்கையை உண்டு .
அந்த வகையில் சுசீந்திரன் , யுகபாரதி , இமான் கூட்டணியில் உருவாகும் இந்தப்படம் சமூகத்துக்கான நல்ல கருத்துக்களை பேசக்கூடிய படமாக இருக்கும் என்று நினைக்கிறேன் . இந்தமாதிரியான படங்கள் கமர்ஷியல் ரீதியாக வெற்றிபெற்றால் மட்டுமே இந்தமாதிரியான படங்கள் எடுக்கமுடியும் என்கிற நம்பிக்கை கலைஞர்களுக்கு ஏற்படும் . தயாரிப்பாளர்களும் தயாரிக்க முன்வருவார்கள் , தமிழ் ரசிகர்கள் எந்தப்படத்தையும் தரம்பிரித்து பார்ப்பதில்லை , இந்தப்படம் கமர்சியல் ரீதியாகவும் , அரசியல் ரீதியாகவும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது . என்றார்