ராமா ரீல்ஸ் தயாரிப்பில் பரத் நடிக்கும் “ கடைசி பெஞ்ச் கார்த்தி “

இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் வலுவான வர்த்தகங்களைக் கொண்டிருக்கும் சுதிர் புதோடா தனது ராமா ரீல்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக தயாரிக்கும் படம் “ கடைசி பெஞ்ச் கார்த்தி “

இந்த படத்தில் பரத் கதாநாயகனாக நடிக்கிறார். பஞ்சாப்பில் மியூசிக்கல் ஆல்பங்களின் டாப் ஸ்டாரும் பிரபல மாடலுமான ருஹானி ஷர்மா மற்றும் அங்கனா ராய் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். மற்றும் ரவிமரியா, ஞானசம்பந்தன், சனா, சுரேகா, வாணி, இயக்குனர் காசி, மூனார் டேவிட், மதுரை வினோத் ஆகியோர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – ரவி பார்கவன். இவர் தமிழில் வெல்டன், ஒரு காதல் செய்வீர், திரு ரங்கா ஆகிய படங்களையும், தெலுங்கில் இரண்டு படங்களையும் இயக்கியிருக்கிறார். படம் பற்றி இயக்குனர் கூறியதாவது…

இன்றைய ஸ்மார்ட் போன்களின் மாடர்ன் உலகில் பெரும் மாற்றங்களுக்கு உள்ளாகி தனது தனித்துவத்தை இழந்தவற்றில் காதலும் ஒன்று. உண்மையில் காதலின் அர்த்தம் என்ன ? காதல் என்பது எதுவரை ? இன்றைய இளைய தலைமுறைக்கு காதல் மீது நம்பிக்கை இருக்கிறதா? என முழுவதுமாக காதலை மையமாக கொண்ட கலகலப்பான கமர்ஷியல் திரைப்படமாகவும் இன்றைக்குள்ள காதல் ட்ரெண்டை பிரதிபலிக்கும் வகையில் “ கடைசி பெஞ்ச் கார்த்தி “ தயாராகிறது. படப்பிடிப்பு சென்னை, கோவை, அமலபுரம், ஹைதராபாத் போன்ற இடங்களில் நடைபெற்று வருகிறது என்றார் இயக்குனர் ரவி பார்கவன்

Ajith Thunivu Movie Release on Jan 11th
Previous articleகடவுள் இருக்கான் குமாரு படத்துக்கு தடை கோரி வழக்கு…!
Next articleதிரையுலகின் வெறித்தனமான ‘சைத்தான்’ விஜய் ஆண்டனி – தயாரிப்பாளர் டி சிவா