சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூன்றுமுகம் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ்

கிட்ட தட்ட 100  கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்த காஞ்சனா – 2 படத்தை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் தற்போது “ மொட்ட சிவா கெட்ட சிவா, “ சிவலிங்கா “  போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினின் மூன்று முகம் ரீமேக்கில் நாயகனாக நடிக்கிறார்.

மிக பிரமாண்டமாக ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிக்கும் இந்த படத்தின் இயக்குனர் இன்னும் முடிவாகவில்லை. மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

ஜிகர்தண்டா படத்தை தயாரித்த ஸ்ரீ மீனாட்சி கிரியேசன்ஸ் எஸ்.கதிரேசன் இந்த பட தயாரிப்பில் உறுதுணையாக இருந்து வருகிறார்.