ஜி.வி.பிரகாஷ் நடிப்பில், ராஜேஷ் இயக்கத்தில் வெளிவர உள்ள படம் ” கடவுள் இருக்கான் குமாரு “. இந்த படம் நவம்பர் 11 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில் வேந்தர் மூவிஸ் மதன் தனக்கு பணம் தரவேண்டும் என்றும் அவர் தலைமறைவாக உள்ளதால் அவருடைய பங்குதாரர் T.சிவா பெயரில் “கடவுள் இருக்கான் குமாரு ” படத்தை வெளியிட முயற்சிகள் நடப்பதாகவும், இந்த படத்தை வெளியிட்டு விட்டால் தன்னால் பணத்தை வசூலிக்க முடியாது எனவும், எனவே படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என மெரினா பிக்சர்ஸ் நிர்வாக பங்குதாரர் சிங்காரவேலன் சென்னை உய்ரநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கை வரும் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, மதனின் பங்குதாரரான T.சிவாவை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளார்.