பிரம்மாண்ட அரங்கத்தில் ஆரம்பமானது ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் படப்பிடிப்பு

வர்த்தக உலகினர் தங்களின் இமைகளை மூடாமல் உன்னிப்பாக கவனித்து வரும் ஒரு திரைப்படம்,  ‘கேமியோ பிலிம்ஸ்’  சி ஜெ ஜெயக்குமாரின் தயாரிப்பில், ‘டிமான்டி காலனி’ புகழ் அஜய் ஞானமுத்து இயக்கும்  ‘இமைக்கா நொடிகள்’. அதர்வா – நயன்தாரா – ராஷி கண்ணா மற்றும் அனுராக் காஷ்யப் என தலைச் சிறந்த நட்சத்திர கூட்டணியிலும், வலுவான தொழில் நுட்ப கலைஞர்களை கொண்டும் உருவாகும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் படப்பிடிப்பு, இன்று எம் ஜி ஆர் பிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு பிரம்மாண்ட அரங்கத்தில் மிகுந்த உற்சாகத்துடன் தொடங்கியது….  மிகுந்த பொருட் செலவில், மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் இமைக்கா நொடிகள் திரைப்படம் ரசிகர்களை பிரமிக்க வைக்கும் என்பதை எந்தவித சந்தேகமும் இன்றி சொல்லலாம்… வியப்பூட்டும் வகையில் கனகச்சிதமாக  அமைக்கப்பட்டிருக்கும்  இந்த பிரம்மாண்ட அரங்கமே அதற்கு சிறந்த உதாரணம்…. தலைச் சிறந்த இயக்குனர் ஏ ஆர் முருகதாஸின் பள்ளியில் இருந்து உதயமானவர் இயக்குனர் அஜய் ஞானமுத்து என்பதை உணர்த்துகிறது  இந்த வியப்பூட்டும் அரங்கம்.
“படப்பிடிப்பிற்கு முன் இருந்தே எங்களின் இமைக்கா நொடிகள் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருவதை நாங்கள் நன்கு அறிவோம்…. அந்த எதிர்பார்ப்பை அனைத்து விதத்திலும் எங்களின் இமைக்கா நொடிகள் திரைப்படம் பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கை எங்களுக்கு முழுமையாக இருக்கின்றது….” என்று கூறுகிறார் தயாரிப்பாளர் சி ஜெ ஜெயக்குமார்.