கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் வீரப்பனால் கடத்தப்பட்ட பண்ணை வீட்டில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் – அதிரன்

பி மூவிஸ் மற்றும்  ஸ்மார்ட் அச்சிவர்ஸ் ஸ்கிரீன்  என்ற இரு நிறுவனங்கள் சார்பாக ராஜா மற்றும் சுரேஷ் குமார் இணைந்து தயாரித்திருக்கும் படம் அதிரன்,இதில் நாயகன்,நாய கியாக  புது முகங்கள் சுரேஷ் குமார், சஞ்சனா  அறிமுகமாகியுள்ளார்.இவர்களோடு புதுமுகங்கள் அப்துல் ரஹ்மான்கான் ,தங்கமுத்து,ஸ்ரீராம்,அச்சு ,பாத்திமா,நாகராஜ்,சானு ஆன்டனி,பர்தீஷ் ,கார்த்திக்,இளசு,ஆனந்த் ஆகியோரும் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு இசை ரகு மற்றும் ஜெய்,ஒளிப்பதிவு மகேஷ்,​எடிட்டிங் – இத்ரீஸ் ​,​​கலை கென்னடி,இயக்கம் ஜே.வி.மோகன்.
 
இப்படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது,
 
கல்லூரி  படிக்கும் நாயகன் சூர்யா தனது உயிரான நண்பன் ஸ்ரீயின் குடும்பம் ஒரு கடன் பிரச்சனையில் சிக்கிக்கொள்ள அந்த கடனை தான் தருவதாக பொறுப்பேற்கிறான் சூர்யா ஆனால் சரியான நேரத்தில் தரமுடியாததால் நண்பன் ஸ்ரீ கடத்த படுகிறான்,நண்பனை காப்பாற்ற சூர்யா புறப்படும் போது நாலுபேர் சேர்த்த திருட்டு கும்பல் சூர்யாவிற்கு உதவ முன்வருகிறது சுற் இ எப்படி காப்பாற்ற பட்டார் இந்த திருட்டு கும்பல் அவர்களுக்கு ஏன் உதவியது என்பதெற்கெல்லாம் பதில்தான் மீதி கதை இதன் படப்பிடிப்பு தமிழ் நாடு மற்றும் கர்நாடகாவில் நடைபெற்றது முக்கியமாககர்நாடகாவிலுள்ள சாலவாடி ஏரியாவில் தோட்ட காஜனூறில்  கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் வீரப்பனால் கடத்தப்பட்ட பண்ணை வீட்டில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் இந்த அதிரன் திரைப்படம்தான் என்கிறார் இயக்குனர்.
Previous articleஇரட்டை இயக்குனர்கள் இணைந்து உருவாக்கிய ‘நெஞ்சுக்குள்ள நீ நிறைஞ்சிருக்க’..!
Next articleNenjukkulla Nee Nirainchirukka Movie Stills