கவிதை குண்டர் – எம்சி ஜேஸ், ரிட்டர்ன் ஆஃப் ட்ராகனாக மீண்டும் வருகிறார்

வல்லவன் என்ற ஹிப்பாப் ஆல்பம் மூலமாக இளையராஜாவின் மடைதிறந்து என்ற பாடலை ஹிப்பாப் ஸ்டைலில் பாடி உலகத்திலுள்ள அனைத்து தமிழ் ரசிகர்களையும் கவர்ந்த எம்சி ஜேஸ் மீண்டும் ரிட்டர்ன் ஆஃப் ட்ராகன் என்ற ஆல்பத்தை தீபாவளி அன்று வெளியிட உள்ளார்.
இவர் குருவி படத்தில் ஹேப்பி நியூ இயர் என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்தவர் தொடர்ந்து லாடம்,உத்தமபுத்திரன்,ராஜபாட்டை,வெடி,கோ,சலீம்,எங்கேயும் காதல்,என்னை அறிந்தால்,10 எண்றதுக்குள்ள, இருமுகன் என இவரின் தமிழ் திரைப்பயணம் தொடர்ந்தது.2009 ம் ஆண்டில் கவிதை குண்டர் என்ற வீடியோ ஆல்பத்தை எழுதி இயக்கி இருந்தார்.இதனை சுருதி ஹாசன் வெளியிட்டார்.இந்த ஆல்பத்தை அஜித்திடம் கொண்டு சென்ற போது  அனைத்து பாடலையும் கேட்டவர் தனது அசல் படத்தில் ஒரு பாடலை பாட அஜித் சாரே கேட்டாராம்,ஆனால் சில தவிர்க்க முடியாத காரணத்தால் அதில் பாடமுடியவில்லையாம் அஜித்தின் தீவிர ரசிகனான இவருக்கு அது பெரும் வருத்தத்தை உருவாக்கியதாம் அந்த குறை என்னை அறிந்தால் படம் மூலமாக தீர்ந்ததாம், மேலும் இவர் ஹாரிஸ் ஜெயராஜ் , விஜய் ஆன்டனி, யுவன் ஷங்கர் ராஜா, வித்யாசாகர், டி. இம்மான் போன்ற பிரபல இசையமைப்பாளர்களுடன் நல்ல தொடர்பில் உள்ளார். இருமுகன் திரைப்படத்தில் இவர் பாடிய பாடல் ஒரு மில்லியன் பார்வையாளர்கள் கண்டுள்ளனர். மேலும் ஜிப்ரான் இசையில் உருவாகியிருக்கும் சென்னை டு சிங்கப்பூர் திரைப்படத்தில் ஒரு பாடியோதோடு மட்டுமின்றி வில்லனாகவும் நடித்துள்ளார். இவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்காக சென்னையிலேயே தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.