வருகின்ற அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாகிறது ‘தேவி’ திரைப்படம்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ஒரே சமயத்தில் உருவாகி இருக்கும் முதல் திரைப்படம் ‘தேவி’ என்பது திரையுலகினரின் கணிப்பு.
“ஒரே சமயத்தில் மூன்று மொழிகளில்,  பிரபு தேவா, தமன்னா, சோனு சூட் ஆகிய முக்கிய கதாபாத்திரங்களை தவிர்த்து, அந்தந்த மொழிகளில் பரிச்சயமான  வெவ்வேறு நடிகர் நடிகைகளோடு மற்ற கதாபாத்திரங்களுக்காக  பணியாற்றுவது எனக்கு  சவாலாக தான் இருந்தது… இப்படிப்பட்ட வலுவான கூட்டணியில் பணியாற்றுவது என்பது எனது நீண்ட நாள் கனவு…அந்த கனவை தற்போது  இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நிஜமாக்கி இருக்கின்றனர்.
பிரபு தேவா சார் ஏறக்குறைய பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிப்பில் களம் இறங்கி இருப்பது, எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எல்லையற்ற மகிழ்ச்சி. அவருடைய ஆற்றலும், வேகமும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் போகிறது. ‘தேவி’ படத்தின் டிரைலர் மூலம் எங்களுக்கு ரசிகர்களிடம் இருந்து கிடைத்த உற்சாகமும், வரவேற்பும், எங்களின் வலுவான நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது…
‘தேவி’ படத்தின் ஒரு பாடலை நாங்கள் நாளை வெளியிட முடிவு செய்திருக்கிறோம்…. விரைவில் வெளியாக இருக்கும் எங்களின் ‘தேவி’ படத்திற்கு இந்த பாடல்  பக்கபலமாய் விளங்கும் என பெரிதும் நம்புகிறோம்…’ என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்  இயக்குனர் விஜய்.
Previous articleNaming & Cradle Ceremony of Baby Girl – Rupikaa
Next articleShenbaga Kottai Movie Working Stills