அரவிந்த்சாமி – திரிஷா நடிக்கும் “சதுரங்கவேட்டை – 2”

399

2014ம் ஆண்டு மனோபாலா பிக்சர் ஹவுஸ் தயாரிப்பில் H.வினோத் இயக்கத்தில் நட்ராஜ் நடித்து வெளிவந்து பெரும் வெற்றிப் பெற்ற படம் “சதுரங்கவேட்டை”.

நம்மை சுற்றி நமக்கே தெரியாமல் நம் அறியாமையை பயன்படுத்தி எவ்வாறெல்லாம் நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதனை தெளிவாகவும் வியக்கும்படியும் “சதுரங்கவேட்டை” படத்தில் கூறியிருந்தார்கள்.

முற்றிலும் தென்மாவட்டங்களில் நடைபெறும் ஏமாற்று வேலைகளை பற்றி விவரித்தது சதுரங்கவேட்டை திரைப்படம். தற்போது தினம் தினம் மெருகேறியவரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நகரவாழ் மக்களை தங்களது சிலந்தி வலையில் சிக்கவைத்து எவ்வாறு ஏமாற்றுகிறார்கள் என்பதனை மிக தெளிவாகவும் விவரமாகவும் “சதுரங்கவேட்டை 2” படத்தில் கூறவுள்ளார்கள்.

மனோபாலாவின் மனோபாலா பிக்சர் ஹவுஸ் பெரும்பொருட்செலவில் பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரிக்கின்றது.

சதுரங்கவேட்டை படத்தை இயக்கிய H.வினோத் சதுரங்கவேட்டை 2 படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதுகிறார்.

சலீம் படத்தை இயக்கிய N.V.நிர்மல்குமார் இப்படத்தை இயக்குகிறார். 

அரவிந்த்சாமி கதாநாயகனாகவும்திரிஷா கதாநாயகியாகவும் நடிக்க இவர்களுடன் நாசர்ராதாரவிஸ்ரீமன்பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:

தயாரிப்பு – மனோபாலா

இயக்கம் – N.V.நிர்மல்குமார்

கதைதிரைக்கதைவசனம் – H.வினோத்

ஒளிப்பதிவு – வெங்கடேஷ்

இசை – அஷ்வின் விநாயகமூர்த்தி

படத்தொகுப்பு – ராஜா சேதுபதி

பாடல்கள் – அறிவுமதியுகபாரதி

மக்கள் தொடர்பு – நிகில்

Previous articleShenbaga Kottai Movie Working Stills
Next articleActor Madhavan Reveiled First Look Poster of Odu Raja Odu