திருக்குமரன் எண்டெர்டெய்ன்மெண்ட் வழங்கும் “அதே கண்கள்”

317

பல அறிமுக இயக்குனர்களுக்கு வெற்றி வாய்ப்புகளை அளித்த திருக்குமரன் எண்டெர்டெய்ன்மெண்ட் மேலும்ஒரு புதுமுக இயக்குனர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் “அதே கண்கள்” எனும் படத்தைபிரம்மாண்டமாகவும், அதே நேரம் அனைத்து தரப்பு மக்களும் ரசித்து பார்க்கும் வண்ணம் ஜனரஞ்சகமானமுறையில் தயாரித்துள்ளது.

சமையல் கலைஞனான வருண், தனியாக ஒரு ரெஸ்டாரண்ட் நடத்தி வருகிறான். பத்திரிகையாளரான சாதனா,வருணின் நீண்ட காலத் தோழி. அவனை மனதார விரும்புகிறாள். சாதனா, வருணின் பெற்றோரைச் சந்தித்து,தனது திருமண ஆசையைத் தெரிவிக்கிறாள். அதே சமயம் வருண், துணிக்கடை ஒன்றில் வேலை பார்க்கும் தீபாஎன்ற பெண்ணைச் சந்திக்கிறான். அந்தச் சந்திப்பு வளர்ந்து காதலாகக் கனிகிறது. மூன்று பேரும் தங்கள்திருமணக் கனவினை நோக்கி நகரும் வேளையில் அசாதாரணமான நிகழ்வுகளும் திருப்பங்களும் அவர்களதுவாழ்க்கையைப் புரட்டி போடுகின்றன. மூவரது விதியும் என்னவானது என்பதே ‘அதே கண்கள்’ சொல்லும் கதை.

இயக்குனர் விஷ்ணுவர்தனிடம் பணியாற்றிய அனுபவம் கொண்ட ரோகின் வெங்கடேசன் இந்தப் படத்தின் மூலம்இயக்குனராக அறிமுகம் ஆகிறார்.

கலையரசன் கதாநாயகனாகவும், ஜனனி ஐயர், ஷிவதா கதாநாயகிகளாகவும் நடிக்க, பால சரவணன் முக்கியக்கதாபாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் அபிஷேக், சஞ்சய், லிங்கா, அரவிந்த் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி, ஈரோடு ஆகிய இடங்களில் நடைபெற்று முடிவடைந்தது. தற்போதுஇறுதிகட்ட வேலைகள் மூம்முரமாக நடைபெற்று வருகின்றன.

 

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:

 

தயாரிப்பாளர் : திருக்குமரன் எண்டெர்டெய்ன்மெண்ட்

இயக்குநர் : ரோகின் வெங்கடேசன்

கதை, திரைக்கதை : ரோகின் வெங்கடேசன், முகில்

ஒளிப்பதிவு : ரவிவர்மன் நீலமேகம்

இசையமைப்பாளர் : ஜிப்ரான்

எடிட்டர் : லியோ ஜான் பால்

கலை இயக்குநர் : விஜய் ஆதிநாதன்

சண்டைப் பயிற்சி : ஹரி தினேஷ்

வசனம் : முகில்

பாடல்கள் : உமா தேவி, பார்வதி

மக்கள் தொடர்பு : நிகில்

Previous articleRemo Movie Trailer Review
Next articleலிப்ரா புரோடக்ஷன், வனிதா பிக்சர்ஸ் தயாரிப்பில் ரவீந்தர் சந்திரசேகரன் வழங்கும் “நட்புனா என்னனு தெரியுமா”