நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளிவரவிருக்கும் பக்தி படம் மேற்கு முகப்பேர் ஸ்ரீ கனக துர்கா

309

காளையப்பா பிக்சர்ஸ்  கே.ஜி.காளையப்பன் வழங்க  ஜோதி விநாயகர் சினிமாஸ் என்ற பட நிறுவனம் தயாரித்திருக்கும் படம்  “மேற்கு முகபேர் ஸ்ரீகனக துர்கா”

  இந்த படத்தில் புதுமுகங்கள் மகி,சரவணன் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். திவ்யா நாகேஷ், ஜான்விகா இருவரும் நாயகிகளா நடிக்கிறார்கள்.  முக்கிய வேடத்தில் டெல்லிகணேஷ் டி.பி.கஜேந்திரன் நடிக்கிறார்கள்…மற்றும் நதியாஸ்ரீ, வைகை கவிதா, ராகவி, சுஷ்மிதா,ஸ்ரீஹரி, பிரதீப்,  ஜெனிபர்  ஆகியோருடன் ஏராளமான நகைச்சுவை நடிகர்களும் நடிக்கிறார்கள்.                                        

இசை  –   தேனிசை தென்றல் தேவா ,     ஒளிப்பதிவு –  N.D.சிவமனோகரன்                              

கலை  –  ஆர்.மோகன் ,      நடனம்  –  சம்பத் குமார்                                                             

படத்தொகுப்பு  –  உதயசங்கர் ,     தயாரிப்பு நிர்வாகம் –  ஆத்தூர் ஆறுமுகம்.                 

அலுவலக மேலாளர் –  பத்மநாபன்                                                                                               

இணை இயக்கம் – சங்கர்ஜி                                                                                                                    

கதை ,திரைக்கதை,வசனம்,பாடல்கள் எழுதிE.ஜெயபால் சுவாமி தயாரிக்கிறார்.                                                                                                                                       

சந்திர கண்ணையன்  இயக்குகிறார்.                                                                                                                                         

படம் பற்றி இயக்குனர் கூறுகையில்…  இப்பொழுது சாமி படங்கள் தயாரிப்பு குறைந்து விட்டது. பேய் படங்களை மட்டுமே எடுக்கிறார்கள். ஆனால் நாங்கள் துணிந்து சாமிபடமாக இந்த மேற்கு முகபேர் ஸ்ரீ கனகதுர்கா  படத்தை எடுத்துள்ளோம்.   ஜாதகத்தில் தோஷம் இருக்கும் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் திருமணம் செய்து கொள்கிறார்கள். அதனால்  தோஷம் அவர்களை படாத பாடு படுத்தி விடுகிறது…விரதமிருந்து அம்மனை வேண்டுகிறார்கள்..ஸ்ரீ கனகதுர்கா எப்படி அவர்களை காப்பாற்றினாள் என்பதும்.

 திருமணமாகி ஹனிமூனுக்கு  ஒரு ஜோடி செல்கிறார்கள். ஆனால் அந்த பையனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் காதல் இருந்துள்ளது ..காதல் நிறைவேறாத அந்த பெண் தற்கொலை செய்து கொள்கிறாள்.. பிறகு பேயாக வந்து அந்த புது மணத்தம்பதிகளை வாழ விடாமல் தடுக்கிறது. அவர்கள் ஸ்ரீ கனகதுர்கா அம்மனுக்கு விரதம் இருந்து  எப்படி பேயிடம் இருந்து மீண்டார்கள்  என ஒரு கதை..வித்தியாசமான திரைக்கதையின் மூலம் அனைவரும் ரசிக்கும் வகையில் எடுத்துள்ளோம்.  சாமி படங்களுக்கும், பாடல்களுக்கும்  தேவா எப்போதும் பேர் போனவர் …இந்த படத்திலும் ஐந்து ஹிட்டான பாடல்களை கொடுத்துள்ளார்.

 இந்த படத்தை  காளையப்பா பிக்சர்ஸ் இம்மாதம் உலகம் முழுவதும் வெளியிடுகிறது.

Previous articleChevalier Kamalhaasan Wishes For Thenandal Films’s Mera Woh Matlab Nahi Tha Drama Stills
Next articleCelebrity Badminton League gets going with full momentum