படத்திற்கு படம் வித்தியாசம் நிறைந்த கதாபாத்திரத்தாலும் தன்னுடைய எதார்த்தமான நடிப்பாலும் ரசிகர்கள் மனதில் நிறந்தர இடம் பிடித்த M.சசிகுமார் சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற கிடாரி படத்திற்க்கு பின் தன்னுடைய கம்பெனி புரொடக்ஷன்ஸ் மூலமாக மீண்டும் புதிய படமொன்றை பிரம்மாண்டமாக தயாரித்து படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார்.
இயக்குனர்கள் பாலா மற்றும் சுதா கொங்காராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த P.பிரகாஷ் இப்படத்தின் மூலம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சங்கிலி முருகன், கோவை சரளா, ரோகினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வண்ணம் மிகவும் ஜனரஞ்சகமான முறையில் எடுக்கப்படவுள்ளது.
தர்புகா சிவா படத்திற்கு இசையமைக்க ஐவராட்டம் உறுமீன் படங்களின் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ரவிந்திரநாத் குரு ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். இணை தயாரிப்பு – B. அசோக்குமார்.
இப்படத்தின் பூஜை இன்று இனிதே நடைபெற்றது.
இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் மற்றும் இதர தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்
கதை திரைக்கதை வசனம் இயக்கம் – P.பிரகாஷ்
இசை – தர்புகா சிவா
ஒளிப்பதிவு – ரவிந்திரநாத் குரு
கலை இயக்கம் – மாயபாண்டி
படத்தொகுப்பு – பிரவின் ஆண்டனி
தயாரிப்பு நிர்வாகம் – முத்துராமலிங்கம்
மக்கள் தொடர்பு – நிகில்
இணை தயாரிப்பு – B. அசோக்குமார்
தயாரிப்பு – கம்பெனி புரொடக்ஷன்ஸ்