‘ஸ்டீவ்ஸ் கார்னர்’ தயாரிப்பில் உருவாகிறது இயக்குனர் ராம்பாலா மற்றும் ஜி வி பிரகாஷ் கூட்டணி அமைத்திருக்கும் புதிய திரைப்படம்

296
நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு ஆகிய இரண்டு சிறப்பம்சங்களை கொண்டு உருவாகும் திரைப்படங்களுக்கு என்றுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும்.. தற்போது அந்த வரிசையில் இணைய தயாராக இருக்கிறது, ‘தில்லுக்கு துட்டு’ புகழ் ராம் பாலா இயக்க இருக்கும் திரைப்படம். ரசிகர்களின் நம்பிக்கைக்குரிய கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் ஜி வி பிரகாஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கும்  இந்த  பெயரிடப்படாத  திரைப்படத்தை, ‘ஸ்டீவ்ஸ் கார்னர்’ நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார் ஸ்டீபன்.
“இந்த திரைப்படம் மூலம் ஒரு  வெற்றிகரமான கூட்டணியோடு இணைந்திருப்பது, எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது. ‘லொல்லு சபா’ நிகழ்ச்சி துவங்கப்பட்ட நாட்களில் இருந்தே நான் இயக்குனர் ராம் பாலா சாரின் மிக பெரிய ரசிகன்…. அவருடைய டைமிங் காமெடியைம், கவுண்ட்டர் வசனங்களையும் பார்த்து நான் பல முறை வாய்விட்டு சிரித்ததுண்டு…. சமீபத்தில் வெளியாகி, சூப்பர் ஹிட் அடித்த அவருடைய ‘தில்லுக்கு துட்டு’ திரைப்படமே அதற்கு சிறந்த உதாரணம்….
அதேபோல்,  இன்றைய காலத்திற்கு ஏற்ற  புதுமையான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு பெயரை சம்பாதித்து இருப்பவர் ஜி வி பிரகாஷ்…. அதுமட்டுமின்றி தற்போது தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய கதாநாயகன்களில் அவரும் ஒருவர் என்பதை எந்தவித சந்தேகமுமின்றி சொல்லலாம். நகைச்சுவையின் பிறப்பிடமாக விளங்கும் ராம்பாலா சார் மற்றும்   ரசிகர்களின் நம்பிக்கைக்குரிய நாயகனாக திகழும் ஜி வி பிரகாஷ் ஆகிய இருவருடனும் கூட்டணி அமைத்திருப்பதை நான் பெருமையாக கருதுகிறேன். எங்கள் படத்தின் படப்பிடிப்பை நாங்கள் நவம்பர் மாத இடையில் ஆரம்பிக்க இருக்கிறோம். தற்போது படத்தில் நடிக்க இருக்கும் மற்ற நடிகர் – நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கான தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது ..கதை களத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாகவும், ரசிகர்களின் சுவாரசியத்தை அதிகரிக்கும் வண்ணமாகவும் எங்கள் படத்தில் விரைவில் இணைய இருக்கிறார் பிரபலர் ஒருவர்….” என்று உற்சாகத்துடன் கூறுகிறார் ‘ஸ்டீவ்ஸ் கார்னர்’ நிறுவனத்தின் உரிமையாளரும், இந்த படத்தின் தயாரிப்பாளருமான ஸ்டீபன்.

 

Previous article“அதாகபட்டது மகா ஜனங்களே” படத்தின் பாடல்களுக்கு ஆயுள் அதிகம் – இசையமைப்பாளர் D.இமான் !!
Next articleChevalier Kamalhaasan Wishes For Thenandal Films’s Mera Woh Matlab Nahi Tha Drama Stills