லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கௌரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் – மஞ்சிமா மோகன்

தூங்காநகரம், சிகரம் தொடு என இரண்டு வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் கௌரவ் நாராயணன் தற்போது லைகா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார்.

தொடர் வெற்றி படங்களை தயாரித்து வரும் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 9வது படம் இது.

உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும் மஞ்சிமா மோகன் கதாநாயகியாகவும் நடிக்கும் இப்படத்தில் பிரபல நட்சத்திரங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

சிகரம் தொடு படத்திற்கு பின் மீண்டும் இசையமைப்பாளர் டி.இமான் கௌரவ் நாராயணனுடன் இணைந்து பணியாற்றுகிறார். டிமான்டி காலனியில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய அரவிந்த்சிங் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

இப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு இன்று இனிதே நடைபெற்றது.

இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்

எழுத்து இயக்கம் – கௌரவ் நாராயணன்

தயாரிப்பு – லைகா புரொடக்ஷன்ஸ்

இசை – டி.இமான்

ஒளிப்பதிவு – அரவிந்த்சிங்

கலை – விதேஷ்

படத்தொகுப்பு – KL. பிரவீன்

சண்டைப்பயிற்சி – திலிப் சுப்பராயன்

மக்கள் தொடர்பு – நிகில்

தயாரிப்பு நிர்வாகம் – வெங்கட்.K

நிர்வாக தயாரிப்பு – S.பிரேம்

 

Ajith Thunivu Movie Release on Jan 11th
Previous articleVirumandikum Sivanadikum – Official Trailer
Next article7 Naatkal Movie Working Stills