ஒரே சமயத்தில் மும்மொழிகளில் படமாக்கப்பட்டு வரும் ‘தேவி’ திரைப்படம், அதன் ஆரம்ப நாட்களில் இருந்தே தமிழ், ஹிந்தி, தெலுங்கு ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. பிரபு தேவா, தமன்னா, சோனு சூட் என சிறந்த நட்சத்திர கூட்டணியை கொண்டு உருவாகி வரும் தேவி திரைப்படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் விஜய். கடந்த இரண்டு மாதங்களில் வெளியிடப்பட்ட தேவி படத்தின் இரண்டு டீசர்களும், 11 லட்சம், 19 லட்சம் என யூடூப் பார்வையாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தி கொண்டே போகிறது….இந்த நிலையில், தற்போது ‘தேவி’ படத்தின் டிரைலரை சரியாக 9.9.9 (2+0+1+6) ஆம் தேதி இரவு 9 மணி 9 நிமிட அளவில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்… சிறப்பான தேதியிலும், சிறப்பான நேரத்திலும் வெளியாக இருக்கும் ‘தேவி’ படத்தின் டிரைலரை வரவேற்க ரசிகர்கள் யாவரும் மிகுந்த ஆர்வத்தோடு காத்து இருக்கின்றனர் என்பதை உறுதியாகவே சொல்லலாம்.