சந்தானம் நடித்து வரும் ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் இசை உரிமையை வாங்கி இருக்கிறது ‘திங்க் மியூசிக்’ நிறுவனம்

திரையரங்கிற்கு நம்பி வரும் ரசிகர்களை உற்சாகத்தின் எல்லைக்கு அழைத்து செல்வதே  ஒரு வெற்றிகரமான நடிகரின் உண்மையான சிறப்பம்சம்…. அந்த வகையில் தன்னுடைய பணியை சிறப்பாக செய்து வருகிறார் நடிகர் சந்தானம். ரசிகர்களின் ரசனைகளுக்கு ஏற்றவாறு கதை களங்களை தேர்ந்தெடுத்து வரும் சந்தானம், தொடர்ந்து வெற்றி என்னும் சிகரத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறார்.  ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து விரைவில்  வெளியாக இருக்கும் ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படமானது,   வர்த்தக உலகில் அமோக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. தரமான திரைப்படங்களை மட்டுமே ரசிகர்களுக்கு வழங்கி வரும் ‘கெனன்யா பிலிம்ஸ்’ – ஜெ செல்வக்குமார்  தயாரித்து வரும்  ‘சர்வர் சுந்தரம்’ படத்தை ஆனந்த் பல்கி இயக்கி வர, மராத்திய நடிகை வைபவி ஷந்திலியா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
‘சர்வர் சுந்தரம்’ படம், துவங்கப்பட்ட நாளில் இருந்தே கமர்ஷியல் ரீதியாக அமோக வரவேற்பை பெற்று வருகிறது… இந்த படத்தின் இசை உரிமையை அதன் ஆரம்ப நாட்களிலேயே  முன்னணி இசை நிறுவனமான ‘திங்க் மியூசிக்’ வாங்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது…’சர்வர் சுந்தரம்’ படத்திற்கு கிடைத்த அந்த முதல் அங்கீகாரம் மூலம், வர்த்தக அளவில் அமோக வெற்றி பெறும் அனைத்து  சிறப்பம்சங்களும்  ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் இருக்கிறது என்பதை உறுதியாகவே சொல்லலாம்….