கத்திசண்டை படத்திற்காக ஜார்ஜியாவில்வி ஷால் – தமன்னா பாடல் காட்சி

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது விக்ரம்பிரபு நடிக்கும் “ வீரசிவாஜி “ படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்துக் கொண்டிருக்கிறார். இதை தொடர்ந்து கத்திசண்டை படத்தையும் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் வடிவேலு, சூரி இருவரும் நடிக்கிறார்கள். மேலும் முக்கிய வேடத்தில் ஜெகபதிபாபு, தருண் அரோரா, சரண் தீப், ஜெயபிரகாஷ், நிரோஷா, தாடி பாலாஜி, ஆர்த்தி, பாவா லட்சுமணன் ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் கூறியதாவது….
இந்த படத்திற்காக விஷால் – தமன்னா இருவரும் பங்குபெற்ற
“ குட்டி குட்டி நெஞ்சிலே
காதல் வந்ததும்
நெஞ்சில் லட்சம் பூக்கள் பூக்குதே “ என்ற பாடல் காட்சி நடன இயக்குனர் ராதிகா நடன அமைப்பில் ஜார்ஜியாவில் படமாக்கப் பட்டது. அத்துடன் விஷால் மட்டும் பங்குபெற்ற “ எவன் நெனச்சாலும் என்ன புடிக்க முடியாது என்ற பாடல் காட்சியும் படமாக்கப்பட்டது. இந்த பாடல்கள் அனைத்தும் நிச்சயமாக ஹிட்டாகும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. காமெடிக்கும், அதிரடி ஆக்ஷனுக்கும் முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வரும் இந்த கத்திசண்டை வருகிற தீபாவளி அன்று உலகமுழுவதும் வெளியாகிறது என்றார் இயக்குனர் சுராஜ்.