இரட்டை வேடங்களில் சத்யராஜ் நடிக்கும் “ முருகவேல் “

நாகன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் கே.குகன் பிள்ளை தயாரிக்கும் படம் “ முருகவேல் “
இந்த படத்தில் சத்யராஜ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். அமலா பால் நாயகியாக நடித்துள்ளார். மற்றும், ரம்யாநம்பீசன், கஞ்சா கருப்பு, பப்லு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படம் பற்றி இயக்குனர் ஜோஷி கூறியதாவது….

சத்யராஜ் இந்த படத்தில் தொழிலதிபராகவும், அரசால் தீவிரவாதிகளுக்கு எதிராக செயல்பட புதிதாக ஏற்படுத்த பட்ட சிறப்பு அமைப்பின் தலைமை அதிகாரியாகவும் இரட்டை வேடங்களில் வாழ்ந்து இருக்கிறார்.  அமலாபால் இந்த படத்தில் தீவிரவாதிகளை கண்டுபிடிக்க உதவும் அஞ்சலி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். கஞ்சாகருப்பு ஆட்டோ ஓட்டுனராக வந்து காமெடியில் கலக்கி இருக்கிறார். படத்தின் படிப்பிடிப்பு பெங்களூர் மற்றும் கோவாவிலும் நடைபெற்று முடிந்தன விரைவில் படம் வெளியாக உள்ளதாக தெரிவித்தார்.