ஜீவாவை தீவிரமாக காதலிக்கும் ‘கவலை வேண்டாம்’ நடிகை சுனைனா

253
இயல்பான பாவனைகளாலும், யதார்த்தமான நடிப்பாலும் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்துச்  செல்லும் ஒரு நடிகை, சுனைனா. நம்முடைய அடுத்த வீட்டில் வசிக்கும் பெண் போல, தமிழ் திரையுலகில்  வலம் வந்து கொண்டிருக்கும் சுனைனா, தற்போது ஜீவா – காஜல் அகர்வால் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள ‘கவலை வேண்டாம்’ படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.  ஆர் எஸ் இன்போடைன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து இருக்கும் கவலை வேண்டாம் படத்தை இயக்கி இருக்கிறார் ‘யாமிருக்க பயமே’ புகழ் டீகே. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பெருமளவில் திரட்டியுள்ள ‘கவலை வேண்டாம்’ படமானது வருகின்ற அக்டோபர் 7 ஆம் தேதி (தசரா விடுமுறை நாட்களில்) ரசிகர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க தயாராக இருக்கின்றது….
“கவலை வேண்டாம் படத்தில் ஜீவா சாருடன்  இணைந்து பணியாற்றியது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது… தமிழக ரசிகர்களுக்கு தரமான படங்களை மட்டுமே வழங்கி வருபவர்  எல்ரெட் குமார் சார்…தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக செயல்பட்டு வரும் அவருடைய ஆர் எஸ் இன்போடைன்மெண்ட் நிறுவனத்திற்காக நான் ‘கவலை வேண்டாம்’ படத்தில் நடித்திருப்பது, எனக்கு பெருமையாக இருக்கின்றது… இயக்குனர் டீகே என்னிடம் ‘கவலை வேண்டாம்’ படத்தின் கதையை கூறும் போதே, இந்த கதாப்பாத்திரத்தில் நடித்தாக வேண்டும் என நான் முடிவு செய்துவிட்டேன்… ஜீவாவை தீவிரமாக காதலிக்கும் சாதுவான பெண் கதாப்பாத்திரத்தில் நான் ‘கவலை வேண்டாம்’ படத்தில் நடித்திருக்கிறேன்…  ‘கவலை வேண்டாம்’  படத்தில் என்னுடைய கதாப்பாத்திரமானது நிச்சயமாக ரசிகர்களின் பாராட்டுகளை  பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது….” என்று கூறுகிறார் ‘கவலை வேண்டாம்’ நடிகை சுனைனா.
Previous articleKadalai Movie Audio Launch Stills
Next articleDhayam Teaser