தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசை

நடிகராக பல வெற்றி படங்களில் நடித்தது மட்டுமல்லாது தேசிய விருது உள்ளிட்டஇந்தியாவின் மிக முக்கியமான பல்வேறு விருதுகளை வென்ற நடிகர் தனுஷ். தற்போதுஇவருக்கு இந்தியாவின் தலைசிறந்த நடிகர் , தயாரிப்பாளர் , பாடலாசிரியர் , பாடகர் என பல்வேறு முகம் உண்டு. இத்தனை புகழுக்கு சொந்தக்காரரான நடிகர் தனுஷ் தற்போது இயக்குநர் தனுஷாக அவதாரம் எடுத்துள்ளார். ஆம் தற்போது இவர் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ் கிரண் கதாநாயகனாக நடிக்கும் “ பவர் பாண்டி “ என்னும் திரைப்படத்தை எழுதி இயக்குகிறார்.

இப்படத்தில் நடிகர் ராஜ் கிரண் , பிரசன்னா , சாயா சிங் ஆகியோர் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு ஆர் .வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய தனுஷ் , கஸ்தூரி ராஜா ஆகியோர் எழுதும் பாடல்களுக்கு  ஷான் ரோல்டன் இசையமைக்கிறார் , படத்தொகுப்பு பிரசன்னா ஜி.கே , கலை ஜெயா சந்திரன் , சண்டை பயிற்சி Stunt சில்வா , நடனம் பாபா பாஸ்கர் , காஸ்டியும் டிசைன் பூர்ணிமா ,தயாரிப்பு மேற்ப்பார்வை எஸ்.பி.சொக்கலிங்கம் , நிர்வாக தயாரிப்பு எஸ்.வினோத்.

பவர் பாண்டி திரைப்படத்தின் மற்ற நடிகர்கள் பற்றிய தகவல்கள்  விரைவில் அறிவிக்கப்படும்.

இப்படத்தின் முதல் கட்ட படபிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் இனிதே துவங்கியது.