செப்டம்பர் ஐந்தாம் தேதி வெளியாகிறது ‘எமன்’ படத்தின் ‘எம் மேல கைய வெச்சா காலி’ பாடல்

405
ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் என ரசிகர்களை பல வகையாக பிரிக்கலாம். ஒவ்வொரு தரப்பினருக்கும் ஒவ்வொரு நடிகரை பிடிக்கும்.ஆனால் இந்த எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்தமான ஒரு நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் ஆண்டனி.  விரைவில் வெளியாக இருக்கும் ‘சைத்தான் படத்தை தொடர்ந்து, விஜய் ஆண்டனியின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எமன்’ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில்  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. தரமான கதைகளை மட்டுமே தேர்வு  செய்து, அதை திரைப்படங்களாக  ரசிகர்களுக்கு வழங்கி வரும் ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த ‘எமன்’ படத்தை இயக்கி இருக்கிறார் ‘நான்’ பட இயக்குனர் ஜீவா ஷங்கர்.
‘எமன்’ படத்திற்காக விஜய் ஆண்டனி இசையமைத்து பாடியிருக்கும்  ‘எம் மேல கைய வெச்சா காலி’ என்னும் பாடலானது வருகின்ற செப்டம்பர் ஐந்தாம் தேதி  வெளியாக இருக்கின்றது. ‘லைக்கா கோவை கிங்ஸ்’  -‘சேப்பாக் சூப்பர் கில்லிஸ்’ அணிகளுக்கு இடையே செப்டம்பர் ஐந்தாம் தேதி திருநெல்வேலியில் நடைபெற இருக்கும் கிரிக்கெட் போட்டியின் போது , இந்த’ எமன்’ படத்தின் பாடலை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

 

Previous articleKuttrame Thandanai Movie Stills
Next article‘மை கிராண்ட் வெட்டிங் ஆப்ஸ்’ : அறிமுகப்படுத்தினார் ஸ்ரீஜா.!